Breaking News
recent

துபா­யி­லி­ருந்து பிரித்­தா­னியா சென்ற எமிரேட்ஸ் விமானத்தில் அதிர்ச்சி கொடுத்த பயணி விமானமே வெடித்துச் சித­றப்போ­வ­தாக பயணிகள் பீதி.!


துபா­யி­லி­ருந்து பிரித்­தா­னிய பர்­மிங்­ஹாமை நோக்கிச் சென்ற விமா­னத்தில் பய­ணி­யொ­ருவர், தீவி­ர­வா­திகள் தாக்­கு­தலின் போது கூறு­வது போன்று 'கடவுள் மகா பெரி­யவர்' என கூச்­ச­லிட்­ட­வாறு உணவையும் நான்கு புறமும் வீசி­யெ­றித்து குண்டு வெடிப்புச் போன்று சப்தம் எழுப்பியதால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.


அந்த எமிரேட்ஸ் போயிங் 777 விமா­னத்தில் பய­ணித்த பய­ணிகள் அனைவரும் அச்­ச­மயம் தமது விமா­னத்தில் குண்டுத் தாக்­குதல் ஒன்று இடம்­பெற்று விமானம் வெடித்துச் சித­றப் ­போ­வ­தாக பீதி அடைந்­து­ளனர்.


பர்­மிங்­ஹாமில் சால்ட்லி எனும் இடத்தைச் சேர்ந்த சல்வார் என்ற சுருக் கப் பெயரால் அழைக்­கப்­படும் அந்தப் பயணி (38 வயது), இவ்­வாறு கூச்­ச­லி­டு­வ­தற்கு முன்னர் விமா­னத்தில் பாது­காப்பு பட்­டியை அணிய மறுத்து விமானப் பணி­யா­ளர்­க­ளுடன் தக­ராற்றில் ஈடு­பட்­ட­தாக 
தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

அத்­துடன் அவர் தனது கைகளால் தனது தலையில் அடித்துக் கொண்டுள்ளார்.

இந்­நி­லையில் விமா­னத்­தி­லி­ருந்த பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்தனர்.தொடர்ந்து விமானம் பிர்­மிங்­ஹாமில் பாது­காப்­பாக தரையிறக்கப்­பட்­டது.

சல்வார் தனது பாட்­டியின்மரணத்தால்மனப்பாதிப்புக்குள்ளாகியிருந்ததா­கவும் சம்­பவ தினம் தனது மன பதற்­றத்தை தணி­விப்­ப­தற்­கான மருந்தை அவர் உட்­கொள்­ளா­மையே இந்தக் குழப்­பத்­திற்கு காரணம் எனவும் அவரது சட்டத்தரணி தெரிவிக்கிறார்.

அவர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி பிர்மிங் ஹாம் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.