Breaking News
recent

கல்லூரி பாடப்புத்தகங்களை இணைய தளத்தில் தமிழில் படிக்கும் வசதி.!


கலை அறிவியல், மருத்துவம், பொறியியல் ஆகிய கல்லூரி பாடப்புத்தகங்கள் 900 தலைப்புகளில் தமிழில் மின்மயமாக்கம் செய்து இணைய தளத்தில் படிக்கும் வசதியை தமிழ்நாடு பாடநூல் கழகமும், தமிழ் இணைய கல்வி கழகமும் செய்து வருகிறது.

பாடநூல் நிறுவனம்சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ.வளாகத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் உள்ளது. இந்த நிறுவனம் தற்போது 1-வது முதல் 12-வது வகுப்பு வரை பாடப்புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. 

கடந்த 1970-ம் ஆண்டு முதல் 80-ம் ஆண்டுவரை கல்லூரிகளில் உள்ள பாடப்புத்தகங்களையும் வெளியிட்டு வந்தது. அவ்வாறு வெளியிடப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்தும் தமிழில் இருந்தன.

தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்து அந்த பாடப்புத்தகங்களை தமிழ் இணைய கல்வி கழகமும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் சேர்ந்து மின்மயமாக்கம் செய்து இணையதளத்தில் வெளியிட முடிவு செய்தன. 

அவ்வாறு வெளியிட்டால் உலகம் முழுவதும் யாராக இருந்தாலும் அந்த பாடப்புத்தகங்களை தமிழில் படித்துக்கொள்ளலாம்.900 தலைப்புகளில்...அந்த பாடப்புத்தகங்கள் 900 தலைப்புகளில் இணையதளத்தில் வெளியிட தயாராக உள்ளன.

 900 தலைப்புகளில் கணிதம், வேதியியல், இயற்பியல், வரலாறு, விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட கலை அறிவியல் பாடப்புத்தகங்கள், மருத்துவ பாடப்புத்தகங்கள், பொறியியல் பாடப்புத்தகங்கள் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. 

சென்னை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி எழுதிய வரலாற்று பாடம் மற்றும் வானவியல் புத்தகம் ஆகியவையும் இதில் அடங்கும். மின்மயமாக்கும்...இந்த பாடப்புத்தகங்கள் பல தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் இருந்தன. 

மீதம் உள்ள புத்தகங்கள் கன்னிமாரா நூலகம், பல்கலைக்கழக நூலகங்கள், கல்லூரி நூலகம் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்டன.

 பாடப்புத்தகங்கள் அனைத்தும் ஏற்கனவே தமிழில் உள்ளன. அந்த பாடப்புத்தகங்களை மின்மயமாக்கும் (டிஜிட்டல்) பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டது. 

ஆனால் இணையதளத்தில் வெளியிடுவதற்கு சிறு சிறு பிரச்சினை உள்ளன. அவை சரி செய்யப்பட்டு விரைவில் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.எதிர்காலத்திட்டம்இவற்றை இணையதளத்தில் வெளியிட்டபிறகு மொபைலிலும் வெளியிட எதிர் காலத் திட்டம் உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக வட்டாரங்கள் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பிரிவில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் ஆகியவை தற்போது தமிழிலும் உள்ளது. 

பொறியியல் படிப்பு பற்றி தமிழில் ஏற்கனவே எழுதப்பட்டதால் இனி கவலை இல்லை. ஸ்டெனோகிராப் -க்கு என தனி அகராதி உள்ளது. 

புத்தகங்கள் அனைத்தும் தற்போதும் நடை முறையில் உள்ளவைதான். இந்த பாடப்புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் பட்சத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் கழகமே அந்த புத்தகங்களை வெளியிடும் திட்டத்தில் உள்ளது என்று தெரிவித்தன.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.