Breaking News
recent

ஓடும் பேருந்தில் வைத்து இஸ்லாம் பெண்ணை “கொள்ளைகாரி” என கூறிய நபர்: தக்க சமயத்தில் கைகொடுத்த ஓட்டுநர்.!


கனடாவில் பர்தா அணிந்து பேருந்தில் பயணித்த இஸ்லாமிய பெண்ணை இன ரீதியான வார்த்தைகளால் பேசிய நபரை, வாகன ஓட்டுநர் கண்டித்துள்ளார்.

ஓட்டாவில் OC Transpo என்ற பேருந்தில் De Jong(20) என்ற பெண்மணி பயணித்துள்ளார், அப்போது சகபயணி ஒருவர், இவர் பர்தா அணிந்திருந்ததை பார்த்து, சக பயணிகளிடம் இவர் வங்கி கொள்ளைகாரி என கூறி கிண்டல் செய்துள்ளார்.

அதோடு, நிறுத்திக் கொள்ளாமல் தீவிரவாதி என்று கூறி இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ளார், இதனை கேட்டுக்கொண்டிந்த வாகன ஓட்டுநர் Alain Charette, இடையில் குறுக்கிட்டு, உனக்கு பேருந்தில் ஏதாவது பிரச்சனை என்றால் என்னிடம் கேள், அந்த பெண்ணை விமர்சிப்பதை நிறுத்து, அப்படி முடியவில்லையென்றால் பேருந்தில் இருந்து இறங்கிவிடு என கூறியுள்ளார்.

அந்த நபரும் பேருந்தை விட்டு இறங்கி சென்றுள்ளார், இதுகுறித்து ஓட்டுநர் கூறியதாவது, எனக்கு 35 வருட அனுபவம் உள்ளது, எனவே பயணிகளையும் எவ்வாறு சமாளிப்பது என்பது எனக்கு ஓரளவுக்கு தெரியும் என கூறியுள்ளார்.

தன்னை காப்பாற்றிய அந்த ஓட்டுநருடன் இணைந்து அப்பெண் செல்பி எடுத்துக்கொண்டார், மேலும் உங்கள் மனிதாபிமானம் போற்றுவதற்குரியது என கூறியுள்ளார்.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.