Breaking News
recent

துபையில் உள்ள குவைத் பள்ளியில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.!(புகைப்படம் இணைப்பு)



குவைத் பள்ளி (MASJID KUWAIT LOOTAH MASQUE) என்றழைக்கப்படும் இப்பள்ளி வாசலை துபை மற்றும் ஏனைய அமீரகப்பிரதேசத்தில் உள்ள நமதூர்வாசிகள் மற்றும் நமது தமிழ் சகோதரர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.காரணம் பெரும்பாலான தமிழர்கள் தொழுகைக்காகவும், நோன்பு திறப்பதற்க்காகவும் இப்பள்ளிவாசலைத்தான் நாடி வருவார்கள்.

டேரா துபை தமிழ் பஜார் என்றழைக்கப்படுகிற நம் தமிழ்ச்சொந்தங்கள் பரபரப்புடன் அதிகம் நடமாடும் சிக்கத் அல் ஹைல் ரோட்டிற்கு மேற்ப்புறம் நோக்கியவாறும்,முற்ஸித் பஜார், கோல்டு பஜார்க்கு (dubai gold souk) கீழ்புறத்திலும் மக்கள் நடமாட்டம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் மெயின் பஜாரில் அமைதி சூழ அழகான கட்டமைப்பில் அமைந்துள்ளது குவைத் பள்ளியெனும் ''மஸ்ஜித் குவைத் லூத்தாஹ் மாஸ்க்''.

இப்பள்ளியின் தனிச்சிறப்பு என்னவெனில் நோன்பு மாதத்தில் நோன்பு திறக்க வழங்கப்படும் இப்தார் உணவு நமது ஊர் பள்ளிகளில் வழங்கப்படுவதைப் போல இங்கு நோன்புக்கஞ்சி, வடை சமூசா, ஆரஞ்சுப்பழம், பேரித்தம்பழம் தண்ணீர் பாட்டில் ஆகியவை வழங்கப்படுகிறது. நோன்பு திறக்க தேவையான போதுமான உணவு வழங்கப்படுவதால் ஏனைய மாதத்தை விட நோன்பு மாதங்களில் இங்கு கூட்டம் நிரம்பி வழியும். தினமும் சுமார் ஆயிரத்து ஐநூறு பேர் வரை இந்தப்பள்ளிக்கு வந்து நோன்பு திறந்து விட்டுச் செல்கின்றனர்.

அடுத்து சொல்லப்போனால் நீண்ட நாட்களாக தமிழ் நாட்டைச்சார்ந்த நம் சகோதரர் தான் இப்பள்ளி வாசல் இமாமாக இருந்தார்கள். அதனால் அடிக்கடி தமிழில் பயான், தமிழில் மார்க்க சொற்ப்பொழிவு என்று இங்கு அடிக்கடி தமிழில் மார்க்க விளக்கக்கூட்டம் நடை பெரும். ஆகவே நம்மக்கள் அதிகமாக இப்பள்ளியில் காணப்படுவார்கள்.

இன்னும் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்தப் பள்ளி வாசல் துபையில் பிரசித்திபெற்ற பெரிய நிறுவனங்களில் ஒன்றான அஸ்கான் (ASCON & ETA)என்றழைக்கப்படும் நம் தமிழ் நாட்டு கம்பெனி நிறுவனர்களாலும் மற்றும் துபாய் ஈமான் சங்க நிறுவனர்களாலும் ஒருங்கிணைந்து இந்த நோன்பின் இப்தார் உணவை வருடம் தவறாமல் நோன்பு முப்பது தினங்களுக்கும் சுமார் ஆயிரத்து ஐநூறு முதல் இரண்டாயிரம் பேருக்கான உணவை தயார் செய்வதுடன் அதனை முறையாக பரிமாறி சிறப்புடன் வழங்கி வருகிறார்கள். இவர்களது இந்த பொது நலச்சேவையை இவ்வேளையில் நினைவு கூறாமல் இருக்கமுடியாது.

அவர்களது இச்சேவை இனிவரும் எல்லா வருடங்களிலும் தொடர்ந்து நடந்திட அல்லாஹ்விடத்தில் துவாச்செய்வோமாக.!














VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.