Breaking News
recent

வெறும் மூன்றரை மணி நேரம் நோன்பு நோற்கும் ஓமான் கிராம மக்கள் உண்மை என்ன?


நேற்று முகநூலில் ஒரு செய்தி மிக வேகமாக பரவி பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது அந்த செய்தி என்னவெனில்..,

ஓமானின் தலைநகரான மஸ்கட்டிலிருந்து 150KM தூரத்தில் அமைந்திருக்கும் வெகான் எனும் கிராமத்தில் வெறும் 3.5 மணி நேரம் நோன்பு காலமாக இருப்பதாகவும் உலகிலேயே குறைந்த நேரம் நோன்பிருக்கும் மக்கள் இங்கு வசிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்..

சவூதி அரேபியாவின் அஜல் நாளிதழை மேற்கோள் காட்டியுமிருந்தார்கள்..


உண்மை என்னவெனில் கடல் மட்டத்திலிருந்து 2000 மீற்றர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கிராமம் முற்றிலும் மலைகளினால் சூழப்பெற்றது, கழுதை குதிரை போன்ற கால்நடைகளின் மூலமாகவே அதிகபட்சமாக இந்த கிராமத்தை மக்கள் அடைகிறார்கள்,,

காலை 11 மணிக்கு உதயமாகும் சூரியன் 2.30 மணிக்கெல்லாம் மலைகளின் பின்னால் ஒளிந்து கொண்டு மறைந்துவிடுகின்றது, அதன் அர்த்தம் சூரியன் முற்றாக மறைந்து விட்டதென்று அல்ல..

ஆனால் அங்குள்ள மக்கள் ஓமானில் கடைப்பிடிக்கும் நோன்பு நேரத்தையே கடைப்பிடிக்கிறார்கள் இதனால் அங்கு 3.5 நேரம் எல்லாம் யாரும் நோன்பிருப்பதில்லை.. என ஓமானின் மத விவகார அமைச்சை மேற்கோள் காட்டி.., டைம்ஸ் ஒப் ஓமான் தெரிவித்திருக்கின்றது..
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.