Breaking News
recent

​ஆன்லைனில் பென்ஷன் திட்டத்தைத் தொடங்கலாம் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்.!


என்.ஆர்.ஐ என அழைக்கப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இனி தேசிய ஓய்வூதிய திட்டத்தை (National Pension scheme) எந்த நேரடியான ஆவணங்களையும் சமர்ப்பிக்காமல் ஆன்லைனில் தொடங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு வரை ஆவணங்களை நேரில் சென்று சமர்ப்பித்து மட்டுமே என்.ஆர்.ஐ-கள் பென்ஷன் கணக்கைத் தொடங்க முடியும். 


இனி ஆதார் அல்லது பேன் கார்டு இருந்தால், தேசிய ஓய்வூதியத் திட்டக் கணக்கை ஆன்லைனிலேயே தொடங்கலாம் என நிதி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட 29 மில்லியன் மக்கள், உலகம் முழுவதிலும், 200 நாடுகளில் வாழ்கிறார்கள் என்பதும், அதில் 25 சதவிகிதம் பேர் வளைகுடா நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதும், வெளிநாடுகளுக்கு சென்று வாழும் நபர்களின் எண்ணிக்கையில், இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.