Breaking News
recent

சுற்றுலா, வணிகம், மருத்துவம் அனைத்தையும் உள்ளடக்கி வெளிநாட்டினரை கவர புதிய வகை ‘விசா’ மத்திய அரசு பரிசீலனை.!


வெளிநாட்டினரை கவருகிற வகையில் சுற்றுலா, வணிகம், மருத்துவம், மாநாடு, சினிமா படப்பிடிப்பு என எல்லா நோக்கங்களையும் உள்ளடக்கிய நீண்டகால ஒன்றிணைந்த விசா வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதற்கான யோசனையை மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வகை விசா அதிகபட்சமாக 10 ஆண்டு காலம் வரைக்கும் செல்லுபடியாகத்தக்க விதத்தில் அமையக்கூடும். 

அதே நேரத்தில் இந்த விசாவின் கீழ் இந்தியாவில் நிரந்தரமாக தங்கி விடவும் முடியாது. வேலை செய்யவும் முடியாது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே விரைவில் இந்த விசா அமலுக்கு வரலாம்.

தாய்லாந்து போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவுக்கு வரக்கூடிய வெளிநாட்டினரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், இந்த வகை விசா அமலுக்கு வருகிறபோது, 

கூடுதலான எண்ணிக்கையில் வெளிநாட்டினர் இங்கே வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.