Breaking News
recent

ரமலான் மாதத்தில் ஃபலஸ்தீனின் மேற்கு கரையில் குடிநீர் இணைப்பை தடுக்கும் இஸ்ரேல்.!


இஸ்ரேல் தேசிய குடிநீர் நிறுவனம் ஃபலஸ்தீனின் மேற்குக்கரையின் முக்கிய பகுதிகளுக்கு ரமலான் மாதத்தில் குடிநீர் விநியோகத்தை நிறுத்தியுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஃபலஸ்தீனியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஃபலஸ்தீன பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்பவர்களில் முக்கிய நிறுவனமான மிகொரோட் என்கிற நிறுவனம், ஜெனின், நப்லஸ், ஸல்ஃபிட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தை நிறுத்தியுள்ளது.

இது குறித்து ஃபலஸ்தீன நீராற்றல் குழுவின் நிர்வாக இயக்குனரான அய்மான் ராபி கூறுகையில், “சில பகுதிகளில் மக்கள் 40 நாட்களாக சரியான குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர்.

மக்கள் தண்ணீர் லாரிகளில் இருந்து குடிநீரை அதிக பணம் கொடுத்து வாங்கியும் அருகாமையிலுள்ள நீர் ஊற்றுகளில் இருந்து தண்ணீர் நிரப்பியும் தங்கள் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். 

பல குடும்பங்கள் நாள் ஒன்றிற்கு 2 இல் இருந்து 10 லிட்டர் நீரை மட்டும் நம்பி வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது” என்று தெரிவித்தார்.

ஏறத்தாழ 40000 மக்கள் வசிக்கும் ஜெனின் பகுதியில் குடிநீர் விநியோகம் கிட்டத்தட்ட பாதியாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறுமானால் அதற்கு மிகொரோட் நிறுவனம் தான் முழு பொறுபேற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

1967 இல் இருந்து ஃபலஸ்தீனின் மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகளில் மக்களுக்கு குடிநீர் சரியாக கிடைக்கப்பெறாமல் கட்டுப்படுத்தி வருகிறது இஸ்ரேல்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.