Breaking News
recent

இனி ஐடிஐ படித்தவர்கள் நேரடியாக உயர்கல்வியில் சேர முடியும்.!


10ம் வகுப்பு முடித்த பின்பு ஐடிஐயில் சேரும் மாணவர்கள் அதன்பிறகு உயர்கல்வியை தொடர வேண்டுமெனில் மீண்டும் +1, +2 படிக்க வேண்டும்.

 ஆனால் இனி அந்த சிக்கல் இருக்காது என மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறியுள்ளார். 

8 மற்றும் 10 ம் வகுப்பை முடித்தவர்கள் ஐடிஐ படிப்பில் சேருவார்கள். 

ஐடிஐ படிப்பை முடித்த பிறகு இன்னும் உயர்கல்வி பயில வேண்டுமென சிலர் ஆசைப்படுவார்கள். 

இன்னும் சிலர் வேலை கிடைக்கவில்லை அல்லது இன்னும் மேம்படுத்திக் கொள்ள என பல காரணங்களினால் உயர்கல்வி பயில ஆசைப்படுவர்கள். ஆனால் அதற்கு அவர்கள் +1, +2 படிக்காதது தடையாக இருந்தது. 

எனவே இனி 8 ம் வகுப்பு முடித்த பிறகு ஐடிஐ படித்தவர்கள் நேரடியாக 10ம் வகுப்பில் சேர முடியும். 

அதேபோல 10ம் வகுப்பு முடித்த பிறகு ஐடிஐ படித்தவர்கள், நேரடியாக கல்லூரியில் முதலாமாண்டு சேர முடியும். 

அதேபோல என்ஜினீயரிங், பாலிடெக்னிக் போன்ற உயர் கல்வியிலும் சேர முடியும். ஒரு ஆண்டுக்கு 18 லட்சம் மாணவர்கள் ஐடிஐ படிப்பை முடிக்கிறார்கள். 

இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் 17ம் தேதி பிரதமர் மோடி வெளியிடுவார் எனவும் ரூடி தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.