Breaking News
recent

அமெரிக்காவில் முதல் முறையாக, அரிய குர்ஆன் கையெழுத்துப் பிரதிகளின் கண்காட்சி.!


அமெரிக்காவில் முதல் முறையாக அரிய குர்ஆன் கையெழுத்துப் பிரதிகளின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் வாஷிங்டனில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஸ்மித்úஸானியன் இன்ஸ்டிட்யூட் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அதன் இஸ்லாம் கலைப் பிரிவின் தலைமை ஆய்வாளர் மசுமே ஃபர்ஹாத் இது குறித்து தெரிவித்ததாவது:

அரிய வகை குர்ஆன் கையெழுத்துப் பிரதிகளின் கண்காட்சி அக்-15 முதல் நடைபெறவுள்ளது. 

இதில் ஏழாம் நூற்றாண்டிலிருந்து 17-ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தைச்சேர்ந்த மிக அரிய கையெழுத்துப் பிரதிகள் காட்சிப்படுத்தப்படும்.

ஓட்டோமன் சாம்ராஜ்யத்தின் இறுதிக் கட்டத்தில் துருக்கி, இராக், ஈரான், ஆப்கானிஸ்தான், எகிப்து, சிரியா ஆகிய நாடுகளிலிருந்து கிடைத்த குர்ஆன் கைப்பிரதிகள் இஸ்தான்புல்லில் ஒப்படைக்கப்பட்டன. அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அவற்றிலிருந்து மிகச் சிறந்த கைப்பிரதிகள் இந்தக் கண்காட்சிக்காக கொண்டு வரப்படுகின்றன.

மேலும் ஸ்மித்ஸானியன் இன்ஸ்டிட்யூட்டின் ஆசியப் பிரிவின் வசமுள்ள ஏராளமான அரிய கைப் பிரதிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இவை தவிர, தனியாரிடம் உள்ள அரிய குர்ஆன் கைப் பிரதிகள் கண்காட்சியில் இடம் பெறும்.

அச்சு இயந்திரங்கள் இல்லாத காலத்தில் கையெழுத்துப் பிரதிகளாக உருவான இவற்றில், ஓவிய வகை எழுத்து (கேலிகிராஃபி) நேர்த்தி, இஸ்லாமிய ஓவியக் கலைநயம் ஆகியவை வெளிப்படுகின்றன.

இவை ஒவ்வொன்றையும் உருவாக்கியதன் பின்னணியில் ஒரு பெரும் கதை இருந்திருக்கும் என்பது நிச்சயம். 

மங்கோலிய மன்னர் ஒருவரின் நினைவாக 1307-ஆம் ஆண்டில் எழுதப் பணிக்கப்பட்ட கைப் பிரதி, பல கைகள் மாறி 1531-இல் சுல்தான் சுலைமான் கைக்கு வந்தது. 

அதன் பின்னர் அவரது சந்ததியினர் அந்தப் பிரதியைப் பாதுகாத்து வந்தனர் என்றார் அவர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.