Breaking News
recent

ஒரு மணிநேரத்தில் என்பதுக்கும் அதிகமான கார்களை பறிமுதல் செய்த துபாய் போலிஸார்.!


துபாயில் ஒரு மணி நேரத்திற்கு முந்நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பொறுப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்ட எண்பதிற்கும் மேலான கார்களை துபாய் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

போலிஸ் தலைமை அதிகாரி கமிஸ் அல் முசைநா சில வாகன ஓட்டிகள் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக தங்கள் வாகனங்களின் நம்பர் பிளேடி வேண்டுமென்றெ நீக்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

துபாய் போலிஸ் அதிகாரிகளின் வாகனங்களில் ஆடம்பர விளையாட்டு கார்களான லம்போகினி போர்ஷே மற்றும் ஆஸ்டன் மார்டின் ஆகியவையும் அடங்கும்.

இவைகளைப் பயன்படுத்தி போலிசார் சட்ட விரோதமாக பந்தயத்தில் ஈடுபட்டவர்களின் கார்களை துரத்திப் பிடித்தனர்.

துபாயில் சட்டவிரோதமாக பந்தயத்தில் ஈடுபடுபவர்களுக்கு 27ஆயிரம் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.