Breaking News
recent

வருமான வரி கட்டவில்லை என்றால் இவையெல்லாம் இனி கட்".!


வரி செலுத்துவதற்கு வசதி இருந்தும் வரி கட்டாமல் ஏமாற்றுபவர்களின் நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் எல்பிஜி மானியத்தை முடக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. 

வரி ஏய்ப்பு மற்றும் ஏமாற்றுதல் போன்ற நடவடிக்கைகளை தடுக்க இந்த ஆண்டு முதல் இந்த நடவடிக்கைகள் எடுக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வரி ஏய்ப்பை பெருமளவில் தடுக்க முடியும் என வருமான வரித்துறை கருதுகிறது.

எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது தொடர்பான வரைவு திட்ட அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முதல் கட்டமாக வரி கட்டாதவர்களின் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) முடக்குவது. 


இதன் மூலம் அவர்கள் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெறுவது முற்றிலும் தடுக்கப்படும் சூழல் ஏற்படும் வாராக் கடனை செலுத்தாதவர்களின் கணக்குகள் எந்த அடிப்படையில் கையாளப்படுமோ அதேபோல `பான்' எண் முடக்கப்பட்டவர்களின் சேமிப்புக் கணக்கும் கையாளப்படும். 

இது தவிர பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் சமையல் எரிவாயு மானியத்தை இதுபோன்ற வரி கட்டாதவர்களின் கணக்கில் செலுத்தாமல் திரும்பப் பெறலாம் என நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. வரி கட்டாமல் ஏமாற்றம் செய்வோரை தண்டிக்கும் விதமாக இத்தகைய நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

யார் வரி செலுத்தவில்லையோ அவர்களது பான் எண்கள் பத்திரப் பதிவுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். வரி கட்டாமல் சொத்துக்கள் வாங்கி பதிவு செய்ய வரும்போது இவர்கள் கையும், களவுமாக பிடிபடுவார்கள் என்பது வருமான வரித்துறையின் திட்டம். மேலும், வரி செலுத்தாதவர்கள் பற்றிய விவரங்கள் வரித்துறை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். 

இதன் மூலம் வரி செலுத்தாதவர்களின் கடன்கள் மற்றும் அரசு மானியங்கள் முடக்கப்படும். சிபில் (சிஐபிஐஎல்) அமைப்புடன் இணைப்பு ஏற்படுத்தி கடன் செலுத்தாதவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் முறையாக வரி கட்டாமல் ஏமாற்றுபவர்களினஅ எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.