Breaking News
recent

"பித்ரா கொடுக்கும் பொருள்களை, போட்டோ எடுக்க வேண்டாம்"


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

மாவட்ட நிர்வாகிகளின் மேலான கவனத்திற்குஇக்கடிதம் தங்களைப் பூரண உடல் நலத்துடனும் வீரியமிக்க ஏகத்துவசிந்தனையுடனும் சந்திக்கட்டுமாக..

வாழ்வாதார உதவிஏழை, எளிய மக்களுக்கு உதவுவது இறைவனிடம் மிகச் சிறந்தநன்மைகளைப் பெற்றுத்தரும் என்ற காரணத்தால் நம்மிடம் வரும் ஜகாத்மற்றும் நன்கொடைகளை முறையாக வசூல் செய்து ஏழ்மை நிலையில்இருப்போரைக் கண்டறிந்து முறையாக விநியோகம் செய்து வருகிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்.
சுயமரியாதைஇந்த உதவிகள் முறையாக விநியோகிக்கப்பட்டது என்பதைஉறுதிப்படுத்துவதற்காக அவற்றைப் புகைப்படங்களாக எடுத்துப்பாதுகாத்து வந்தோம்.

 இந்த நடைமுறை நம்முடைய நேர்மையைஉறுதிப்படுத்தினாலும், உதவியைப் பெறுபவர்கள் போட்டோக்கள்எடுக்கப்படும் நேரத்தில் வெட்கத்தால் கூனிப் போவதை பார்க்க முடிகிறது.

அது மட்டுமின்றி ஆர்வக் கோளாறின் காரணமாக சிலர் அந்தபோட்டோவை வாட்ஸ் அப், பேஸ்புக்கில் பரப்பிவிடுவதும், பேனர் வைத்துஅவர்களை அசிங்கப்படுத்தி விடும் நிகழ்வுகளும் நடந்து விடுவதைப் பார்க்கமுடிகிறது.

வருங்காலங்களில் தவிர்க்கவும்.எனவே இனிவரும் காலங்களில் உதவிகளை வழங்கும்போதுசாட்சிகளை வைத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவரிடம் கையொப்பம்வாங்கிக் கொண்டால் போதுமானது. போட்டோவோ, வீடியோவோ எடுக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

 மேலும் பொது மேடையில் வந்துவாங்கச் சொல்லி அவர்களின் சுயமரியாதையைக் குறைக்கும்வேலைகளிலும் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
முஹம்மது யூசுஃப்
மாநிலப் பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.