Breaking News
recent

மலேஷியாவில் இஸ்லாமிய சட்டம் வருகிறது.!


மலேஷிய பாராளுமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் அந்நாட்டு அரசுக்குள் பிளவை கொண்டுவரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஹுதூத் சட்டம் என அழைக்கப்படும் இந்த சட்டமூலம் எதிர்க் கட்சியான பான் மலேஷியா இஸ்லாமிய கட்சியின் தலைவர் அப்துல் ஹதி ஆங்கினால் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரும் ஒக்டோபரில் விவாதத்திற்கு வரும் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் நாட்டின் தற்போதைய ஷரியா சட்டத்திற்கு மாற்றாக பயன்படுத்தப்படும். 

இதில் முஸ்லிம்களுக்கு கைகளை வெட்டுவது, கல்லெறிவது போன்ற கடுமையான தண்டனைகள் அமுலுக்கு வரும்.

இந்த சட்டமூலத்திற்கு ஆளும் பரிசான் தேசிய கூட்டணியில் இருக்கும் பிரதான கட்சியான ஐக்கிய மலே தேசிய அமைப்பு ஆதரவளிக்கும் வாய்ப்பு உள்ளது. 

பிரதமர் நஜீப் ரஸாக் நிலைமையை சுமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஹுதூத் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படாது என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

மறுபுறம் 1957இல் சுதந்திரம் பெற்றது தொடக்கம் ஆட்சியில் இருக்கம் பரிசான் தேசிய கூட்டணியில் உள்ள முஸ்லிம் அல்லாத உறுப்பு கட்சிகள் ஒருமித்து எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. 

இவ்வாறான ஒரு கட்சியான மலேஷிய இந்திய கொங்கிரஸின் தலைவர் எஸ். சுப்ரமனியம், கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டமூலம் கூட்டாட்சி அரசிலமைப்புக்கு முரணானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அரசில் இருந்து விலகிவிடுவதாக சிறுபான்மை கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.