Breaking News
recent

அமேசான் இணைய தளத்தில் இந்துக் கடவுளர்கள், இஸ்லாமிய படங்களுடன் கால் மிதிகள் விற்பனை.!


பிரபல இ-காமர்ஸ் இணையதளமான அமேசான் இணைய தளத்தில் இந்து, கிறிஸ்தவ கடவுளர்கள் மற்றும் இஸ்லாமிய படங்கள் அச்சிடப்பட்ட கழிவறைக் கால்மிதிகள் விற்பனை செய்யப்படுவது இந்திய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையதளத்தில் இந்த செய்தி அதிகம் பரவவே #BoycottAmazon என்கிற ஹாஷ்டாக் தற்பொழுது இணையதளத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.

இத்தகைய கால் மிதிகளை Rock Bull என்ற விற்பனையாளர் விற்று வருகிறார். அமேசான் இணையதளம் மீது இத்தகைய புகார் வருவது இது முதல் முறை அல்ல என்றும், ஏற்கனவே 2014 ஆம் ஆண்டில் இது போல் இந்துக் கடவுளர்களின் படம் அச்சிடப்பட்ட உள்ளாடைகளை அமேசான் நிறுவனம் விற்று வந்ததாகவும் அதனை இந்து மத போதகர் ராஜன் ஜெட் என்பவர் கண்டித்துள்ளார் என்றும் தெரிகிறது.

குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் விற்பனை செய்வதை நிறுத்தவேண்டும் எனவும் நடந்த தவறுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் அமேசான் இணையதளத்தையே புறக்கணிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.