Breaking News
recent

இந்தியர்களை வெளியேற்றும் வளைகுடா நாடுகள்.. என்ன பிரச்சனை..?


இந்தியர்களுக்கும், பல நாட்டவர்களுக்குத் துபாய், கத்தார் போன்ற அரபு நாடுகள் எப்போது தங்களது வறுமையை ஒழிக்கும் ஒரு தளமாகவே இருக்கிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

படித்த திறன் படித்த மக்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெறியேற்றி பணம் சம்பாதிப்பதற்காக அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் போது, படிக்காத மக்களின் வறுமையை ஒழிக்க வந்தது அரபு நாடுகள். ஆனால் இப்போது இதன் நிலை முற்றிலும் மாறி வருகிறது, எல்லாதுக்கும் எண்ணெய் தான் காரணம்.

ப்ளு காலர் ஜாப் 
வையிட் காலர் ஜாப் என்பதைப் போன்று ப்ளு காலர் ஜாப் என்ற ஒன்றும் உள்ளது. படிப்பு அறிவு அவசியம் அல்லாத மற்றும் திறன் அதிகத் தேவைப்படாத வேலைகளையே நாம் ப்ளு காலர் ஜாப் என்று கூறுவோம்.

வளைகுடா நாடுகள் 
வளைகுடா நாடுகளில் இந்த ப்ளு காலர் ஜாப் வேலைகளைச் செய்யவே இந்தியர்களும் பல நாட்டவர்களும் படையெடுத்து செல்கின்றனர். இப்படிச் செல்வோருக்கு தங்கும் இடம், உணவு என அனைத்தையும் அரபு நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் அளிக்கிறது. இதனால் வாங்கும் சம்பளத்தைப் பெருமளவு சேமிக்க முடியும் என இந்தியர்கள் அரபு நாடுகளுக்குப் படையெடுக்கின்றனர்.

திடீர் மாற்றம்.. 
அனைத்தும் சிறப்பாக இருக்கும் நிலையில், அமெரிக்க மற்றும் கனடா நாடுகளின் எண்ணெய் உற்பத்திக்கு ஈடு கொடுக்கும் வகையில் அரபு நாடுகள் சந்தையில் அதிகளவில் எண்ணெய் உற்பத்தி செய்தனர். இதனால் கச்சா எண்ணெய் விலை 14 வருடச் சரிவை சந்தித்தது. இதன் காரணமாகப் பல அரபு நாடுகள் பட்ஜெட் திட்டத்தை வகுக்கக் கூடப் போதிய நிதி இல்லாமல் தவித்தனர்.

விலை சரிவு 
கச்சா எண்ணெய்யின் தொடர் விலை சரிவினால் அரபு நாடுகள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. இதனால் ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத், ஓமன் நாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ் என அனைத்தையும் ரத்து செய்துள்ளனர்.

ஆட்சேர்ப்பு
மேலும் அனைத்துக் கட்டுமான மற்றும் ப்ளு காலர் ஜாப் வேலைகளுக்கான ஆள் எட்டும் நிறுவனங்களும் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை முழுமையாக நிறுத்தியுள்ளது.

நிதிநிலை பாதிப்பு 

கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் சில முக்கியத் திட்டங்களுக்குக் கூட நிதி அளிக்க முடியாமல் முடங்கியுள்ளது. இதனால் நிறுவனங்கள் ஊழியர்களுக்குச் சரிவரச் சம்பளத்தைக் கூட அளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் நிறுவனத்தின் நிதிநிலையை மேம்படுத்த சில நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையும் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாத பிரச்சனை

ஒரு பக்கம் கச்சா எண்ணெய் விலை சரிவு அரபு நாடுகளைப் பாதித்து வருகையில், யெமென் நாடுகளில் நிலவும் பிரச்சனை மற்றும் சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஊடுருவியுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.

இந்திய மக்கள் 
அரபு நாடுகளில் 1 கோடிக்கும் அதிகமான இந்தியர்களும் வெளிநாட்டவர்களும் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில் 26 லட்சம் பேர் இந்தியர்கள் என்பது தோராயக் கணக்கு.

கச்சா எண்ணெய் 
2008ஆம் ஆண்டில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 145 ஆமெரிக்க டாலர், ஆனால் தொடர் சரிவில் இதன் விலை 40 டாலரை வரை குறைந்தது இந்நாட்டுப் பொருளாதாரத்தைப் பதம் பார்த்தது.

பணிநீக்கம் 

இந்தப் பொருளாதாரச் சரிவால் எண்ணெய் மற்றும் எரிவாயு துறை மற்றும் நிதியியல் துறையில் அதிகளவிலான பணிநீக்கம் செய்யப்படுகிறது. இதர வங்கியியல், ஆட்டோமொபைல் மற்றும் கட்டுமான துறைகளிலும் இதன் தாக்கம் கணிசமாகத் தெரிகிறது.

சம்பள குறைப்பு 
அதேபோல் ஓமன் நாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களில் ஆரம்பச் சம்பளமாக இருக்கும் 2,000 ரியால் தற்போது 800 ரியால் ஆகக் குறைந்துள்ளது. இக்காலகட்டத்தில் இந்நாட்டில் விலைவாசியும் அதிகரித்துள்ளது.

ரியல் எஸ்டேட் 

இக்காலகட்டத்தில் ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத், ஓமன் ஆகிய அனைத்து முக்கிய நாடுகளிலும், ரியல் எஸ்டேட் துறை அதளப் பாதாளத்தைத் தொட்டுள்ளது. இதனால் கட்டுமானத்துறையும் அதிகளவில் பாதித்துள்ளது. தோராயமாக ரியல் எஸ்டேட் விலைவாசி அளவுகள் 10 வருடங்களுக்குப் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது.

தங்க வர்த்தகம் 

மேலும் அரபு நாடுகளில் மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டும் தங்க வர்த்தகம் தற்போது மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.

தேக்கம்.. 

மேலும் 2020ஆம் ஆண்டுத் துபாய் மண்ணில் நடைபெற உள்ள WORLD EXPO 2020 மற்றும் 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள FIFA உலகக் கோப்பைக்காக மிகப்பெரிய கட்டுமான மற்றும் வளர்ச்சி திட்டங்கள் தற்போதுள்ள தேக்கம் அடைந்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.