Breaking News
recent

ரமலான் நோன்பு பேரீச்சை விற்பனை ஜோர்.!


இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடைமைகளில் ஒன்று நோன்பு. ரமலான் முதல் நாள் துவங்கி 30 நாட்கள், அதிகாலை முதல் மாலை சூரியன் மறையும்  வரை பசித்திருந்து  நோன்பை கடைபிடிப்பர்.

 கடந்த 7ம் தேதி ரமலான் நோன்பு துவங்கியது. நோன்பு திறக்கும் போது அவரவர் வசதிக்கேற்ப ஆரஞ்சு, ஆப்பிள் ஜூஸ்  வகைகள், நோன்புக் கஞ்சி என உணவு உண்டாலும், 

முதலில் உண்பது பேரீச்சம்பழம்தான். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 40  ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.  

ஒவ்வொரு வீட்டிலும் நோன்பு திறப்பதற்காக அதிக அளவில் பேரீச்சம்பழம் வாங்குவர். 

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, ஈசநத்தம் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வழக்கமாக பேரீச்சம் பழம் விற்கும் மளிகைக்கடைகள்  மட்டுமின்றி, 

 அனைத்துக் கடைகளிலும் பல்வேறு வகை பேரீச்சம் பழங்கள் விதவிதமான பாக்கெட்டுகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

பேரீச்சை வியாபாரி ஒருவர்  கூறுகையில், பேரீச்சம்பழத்தில் அஜ்வா, மஸ்கட் தமர், யாபிஸ் சவுதி என பல ரகங்கள் உள்ளன. 

கிலோ ரூ.200 முதல் ரூ.1,200 வரை ரகத்திற்கு தகுந்தாற்போல  விற்பனைக்கு உள்ளது. 

மஸ்கட் தமர் பழங்கள் ரூ.200 முதல் ரூ.300 வரை உள்ளதால் இந்த ரகங்கள் இங்கு அதிக அளவில் விற்பனையாகின்றன என்றார். 

ரமலான் நோன்பையொட்டி  அரவக்குறிச்சி, பள்ளபட்டி மட்டுமின்றி, இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் பேரீச்சம்பழங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.