Breaking News
recent

துபாயில் நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி.!


துபாய் போலீசின் போதைப் பொருள் தடுப்புத்துறை, இந்திய துணைத் தூதரகம் மற்றும் ஸ்வதந்தரா எனும் குடி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான அமைப்பு ஆகியவை இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை அரேபியன் செண்டர் வணிக வளாகத்தில் நடத்தியது.

இந்த நிகழ்ச்சியினை துபாய் இந்திய துணைத் தூதரகத்தின் கல்வி, கலாச்சாரம், பத்திரிகை மற்றும் தகவல் துறைக்கான அதிகாரி சுமதி வாசுதேவ் தொடங்கி வைத்தார். 

அப்போது பேசிய சுமதி தனது உரையில் போதைப் பொருள் தடுப்பதற்காக துபாய் போலீசார் மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நிகழ்வினைப் பாராட்டினார். 

இளைஞர்கள் ஒரு சிலர் போதைப் பொருளின் தீமைகளைப் பற்றி தெரியாமல் தவறான வழிகளில் சென்று விடுகின்றனர். 

இதுபோன்றவர்களை கண்டுபிடித்து திருத்த வேண்டியது சமூகத்தின் கடமையாகும். இந்த பணிகளுக்கு இந்திய துணைத் தூதரகம் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும் என தெரிவித்தார்.

துபாய் போலீஸ் போதைப் பொருள் தடுப்புத்துறையின் துணைத் தலைவர் காலித் சலா அல் குவைரி அவர்கள் தனது உரையில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கும் 

இது சம்பந்தமான பணிகளுக்கும் சிறப்பான ஆதரவினை அளித்து வரும் இந்திய துணைத் தூதரகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

துபாய் போலீஸ் போதைப் பொருள் தடுப்புத்துறையின் அதிகாரி மூசா குலித் புகையிலையே இது போன்ற தீமைகள் ஏற்படுவதற்கான மூல காரணம் ஆகும். 

முதலில் இதனை சமூகத்தில் இருந்து ஒழித்து விட்டால் மற்ற பிரச்சனைகளை எளிதில் கையாளலாம் என்றார்.

ஸ்வதந்தரா அமைப்பின் டாக்டர் டி.சி. சதீஷ் மற்றும் டாக்டர் அஜித் தரக்கன் ஆகியோர் புகையிலை மற்றும் ஆல்கஹால் எனப்படும் குடியினால் ஏற்படும் தீமைகள் குறித்து பல்வேறு தகவல்களுடன் விளக்கினர்.

பொதுமக்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் திரைப்பட பாடல்கள் மற்றும் அரபி மொழி பாடல்கள் ஆகியவற்றின் மூலம் குடியின் தீமைகள் குறித்து தெரிவித்தனர். 

இதனை ஆர்வத்துடன் கேட்ட பொதுமக்கள் இது சம்பந்தமாக ஏற்பட்ட கேள்விகளுக்கு விரிவான விளக்கங்களையும் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.