Breaking News
recent

நோன்பால் பலவீனமல்ல, பலம் என்று நிருபித்த தென் ஆப்பிரிக்க முஸ்லிம் வீரர்கள்.!


தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் விளையாடும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து களமிறங்கியது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி  50 ஓவர்களில் 343 ரண்கள் குவித்தனர். இந்த அதிகபடியான இலக்கை அடைய மிக முக்கிய காரணம் அந்த அணியின் துவக்க மட்டையாளர் ஹாஷிம் அம்லாவின் சதம் ஆகும். அவர் 99 பந்துகளில் 110 ரண்களை குவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 204 ரண்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்ததாக தப்ரைஸ் சம்சி 2 விக்கெட்டுகளையும் வெய்ன் பார்னல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதில் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹாஷிம் அம்லா, இம்ரான் தாஹிர், ஷம்ஷி, பார்னல் ஆகிய அனைத்து வீரர்களும் இஸ்லாமியர்கள். இவர்கள் நால்வரும் நோன்பிருந்த வாறு நேற்றைய போட்டியில் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோன்பிருப்பது உடலுக்கு பலவீனம் தரும் என்று சிலர் எதிர்கருத்து பேசிவரும் நிலையில் சீனா உள்ளிட்ட நாடுகள் நோன்புக்கு தடை விதித்துள்ள நிலையில் இந்த வீரர்கள் நோன்பிருப்பது பலவீனமில்லை, பலம் என்று நிருபித்துள்ளனர்.
ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.