Breaking News
recent

ஏழைகளின் பசியை போக்கும் கேரள பெண்ணின் புதுமையான யோசனை.!


உணவுப் பொருட்கள் வீணக்கப்படுவதை தடுக்கும் வகையில் கொச்சியில் ஹோட்டல் நடத்தி வரும் மினு பவுலின் என்ற பெண் புதுமையான யோசனையை மேற்கொண்டுள்ளார். அதற்காக அவர் தனது ஹோட்டல் வாசலில் பிரிட்ஜ் ஒன்றை வைத்துள்ளார். 

இதில் சாப்பிட வழியில்லாத 50 பேருக்கு தினமும் உணவுகளை வைக்கிறார். 24 மணி நேரமும் இந்த பிரிட்ஜில் உணவு இருக்கும். எந்த நேரமும், மற்ற வேறு யாரும் உணவு வைக்கலாம். இவ்வாறு வைக்கப்படும் உணவுகளை பசியில் வாடும் யாரும் எடுத்து சாப்பிடலாம்.

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 33 சதவீத உணவு பொருட்கள், யாருக்கும் பயன் இல்லமல் குப்பையில் கொட்டப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை தவிர்கும் வகையில், கொச்சியில் ஓட்டல் நடத்தி வரும் மினு பவுலின் தனது உணவக வாசலில் பிரிட்ஜ் வைத்துள்ளார். இதில் சாப்பிட வழியில்லாத 50 மக்களுக்கு தினமும் உணவுகளை வைத்து விடுகிறார். இதற்கு நன்ம மரம் என்று பெயரும் வைத்துள்ளார்.

இது தொடர்பாக மினு பவுலின் கூறியதாவது: வயதான பலர், வீடில்லாமல், உணவுக்காக குப்பைகளில் தேடுவதைப் பார்த்தேன். பசியை போக்க பலர் வழியில்லாமல் தவிப்பது, என்னை பாதித்தது. இதற்காக அவர் தனது 'பப்படவட' உணவகத்தில், நன்ம மரம் என்ற உணவு வங்கியை துவக்கியதாக கூறினார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.