Breaking News
recent

தமிழக முதல்வரின் கனிவான கவனத்திற்கு…


நமது தமிழகத்தில் அதிகமான இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகிறோம். இஸ்லாமியர்களின் முக்கிய இரண்டே பண்டிகைகள் ரம்ஜான் மற்றும் பக்ரீத் தான் என்பது தாங்கள் அறிந்தே, இதில் ரம்ஜான் பண்டிகைக்கு முன்னால் ரமலான் மாதம் முழுவதும் முப்பது நாட்கள் நாங்கள் நோன்பு நோற்போம்.

இந்த ரமலான் நோன்பிற்காக அண்டை மாநிலங்களான மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நேற்றைய தினம் (05/06/2016) முக்கிய அறிவிப்பாக அங்கு வாழக்கூடிய பள்ளி, கல்லூரி, தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் இஸ்லாமியர்களுக்கு மாலை 4 மணி முதல் ரமலான் மாதம் முழுவதும் விடுமுறை விடுவதாக முறையாக அறிவித்துள்ளது. 

அதே போன்று கொளுத்தும் வெயிலில் நோன்பு நோற்கும் தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்களுக்கும் இந்த தீர்மானத்தை கொண்டு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

– பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ, பொதுச் செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.