Breaking News
recent

அமெரிக்க துப்பாக்கி சூட்டின் போது 70 பேரின் உயிரை காப்பாற்றிய இம்ரான் யூசுப்இந்தியருக்கு பாராட்டு.!


அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில் கேளிக்கை விடுதியில் நடந்த தாக்குதலின் போது இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இம்ரான் யூசுப் என்பவர் 70 பேரின் உயிரை காப்பாற்றியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

ஆர்லாண்டோ நகரில் கேளிக்கை விடுதிக்குள் புகுந்த ஒமர் என்ற ஐ.எஸ். தீவிரவாதி 49 பேரை சுட்டுக் கொன்றான். 

அந்த நேரத்தில் அங்கிருந்த இம்ரான் யூசுப் தைரியமாகச் செயல்பட்டு 70 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். 

இம்ரான் யூசுப் அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து இம்ரான் யூசுப் கூறுகையில், தாக்குதல் நடந்த கேளிக்கை விடுதியில் பாதுகாவலராக பணியாற்றி வருவதாகவும், தீவிரவாதி ஒமர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டபோது தானும் அக்கூட்டத்தில் சிக்கிக் கொண்டதாகவும் கூறினார். 

பயத்தில் மக்கள் அங்கும் இங்கும் அலறி ஓடிய போது  திரண்டிருந்த கூட்டத்தை தாண்டிக் குதித்து விடுதியின் பின்பக்க கதவை திறந்துவிட்டு அங்கிருந்த 70 பேரை பாதுகாப்பாக வெளியேற்றியதாக கூறினார்.

தனது உயிரை பணயம் வைத்து 70 பேரை இம்ரான் யூசுப் காப்பாற்றியுள்ளார் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.