Breaking News
recent

உங்களின் அடுத்த விடுமுறையில் பயணிக்க, டாப் 5 பாதுகாப்பான பன்னாட்டு விமான சேவை நிறுவனங்கள்.!


ஜூன், ஜூலை மாதங்கள் நமது நாட்டினருக்கு ஒரு உற்சாகம் தரக்கூடியது. கோடை விடுமுறைக்காக பள்ளிகள் மூடப்பட்ட சூழ்நிலையில், பல குடும்பங்கள், தங்கள் விடுமுறையை இந்த மாதத்தில், உள்நாட்டிலோ, அல்லது வெளிநாட்டிலோ கழிப்பார்கள். 

இந்த ஆண்டில் நீங்கள் ஏதேனும், சர்வதேச நாடுகளுக்கு பயணிக்க திட்டமிட்டிருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

பலரும் தங்களுக்கு விருப்பமான விமான நிறுவனங்களை அது தரும் வசதி மற்றும் கட்டண தொகையை வைத்து முடிவு செய்வார்கள். ஆனால், தவிர்க்க முடியாத ஒரு அம்சம் என்றால் அது பாதுகாப்பு. நிறைய ஆய்வுக்கு பிறகு, டாப் 20 பாதுகாப்பான ஏர் நிறுவனங்களை கண்டறிந்துள்ளோம். 

விபத்து, அவசர கால தரையிறக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் டாப் 5 விமான சேவை நிறுவனங்களை இப்போது பட்டியலிடுகிறோம். பாதுகாப்பான பயணம் மட்டுமல்ல, சிறப்பான பயணத்தையும் வழங்க கூடியவை இந்த ஐந்து நிறுவனங்களும்.

1.கேத்தே பசிபிக் ஏர்வேஸ் 
உலகின் சிறந்த ஏர்லைன்ஸ் நிறுவனமாக வேண்டும் என்ற முனைப்போடு செயலாற்றும் கேத்தே பசிபிக் ஏர்வேஸ் நிறுவனம், பாதுகாப்பு மற்றும் சொகுசு இரண்டிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறது. 

190-க்கும் அதிக நகரங்களுக்கு இயக்கப்படும் கேத்தே பசிபிக் ஏர்வேஸ் விமான நிறுவனம், தொடர்ச்சியாக சிறப்பான சேவை அளித்து வருகிறது. இந்த சேவை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பாராட்டி, ஏழு ஸ்டார், ஏர்லைன் ரேட்டிங் பெற்றுள்ளது இந்த நிறுவனம். 

பாதுகாப்பு மட்டுமின்றி, உபசரிப்பு, பொழுதுபோக்கு வசதி போன்றவற்றுக்காகவும்,கேத்தே பசிபிக் ஏர்வேஸ் புகழ் பெற்றது. பல்வேறு சர்வதேச டிராவல் அமைப்புகளிடமிருந்து விருதுகளை பெற்றுள்ளது இந்த ஏர்வேஸ். பயமற்ற பயணத்திற்கு எந்த ஏர்லைனில் புக் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கே தெரிந்திருக்குமே. 

2. எமிரேட்ஸ் 
கடந்த இருபது வருடங்களில் அதீத வளர்ச்சி கண்டுவரும் ஏர்லைன் என்றால் அது எமிரேட்ஸ். அதிகப்படியான சேவைகள் மற்றும் பயணிகள் நட்புறவுக்காக மட்டுமின்றி, பாதுகாப்பு அம்சங்களுக்காகவும் எமிரேட்ஸ் நிறுவனம் புகழ் பெற்றது. நெருக்கடியில்லாத சீட் வரிசை, பொழுதுபோக்கு அம்சங்கள் என, பிற காரணங்களுக்காகவும் பயணம் மேற்கொள்ள உகந்த நிறுவனம்எ மிரேட்ஸ். 

3.எதிஹட் ஏர்வேஸ் 
7க்கு 7 ஸ்டார் ரேங்க் பெற்ற மற்றொரு நிறுவனம், எதிஹட் ஏர்வேஸ். பாதுகாப்பு தவிர்த்து வேறு சில அம்சங்களுக்காகவும், எதிஹட் ஏர்வேஸ் புகழப்படுகிறது. பயணத்தின்போது நமது குழந்தைகளை பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பம்சம். இந்த நிறுவனம் துரிதமாக, உலகின் முன்னணி ஏர்வேஸ் நிறுவனமாக உருவாகிவருகிறது. 

4.லுப்தான்சா 
உலகின் ஏதாவது ஒரு ஏர்லைன்ஸ் தொடர்ச்சியாக பயணிகளிடமும், விமர்சகர்களிடமும் பாராட்டு பெற்று வருகிறது என்றால் அது லுப்தான்சா நிறுவனமாகத்தான் இருக்கும். 

பாதுகாப்பு அம்சங்களுக்காக, ஏர்லைன்ஸ் ரேட்டிங்கில் 7 ஸ்டார் பெற்றுள்ள லுப்தான்சா, அதன், பிற சேவைகளுக்காக 6 ஸ்டார்கள் பெற்றுள்ளது. சுவையான உணவுகளை ருசிக்க ஏற்ற விமான சேவை நிறுவனம் லுப்தான்சா. 

வசதியான இருக்கைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், கொண்டது என்பதால் முதல்முறையாக விமான பயணம் மேற்கொள்வோருக்கு மிகவும் பிடித்தமானதும்கூட. 

5.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 
பல ஆயிரம் கி.மீ தூரத்திற்கும் சேவையை விரிவுபடுத்தியுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது சொகுசு மற்றும் பாதுகாப்புக்காக புகழ் பெற்றது. வாதத்திற்கு சொல்வதென்றால், உலகின் மிக சொகுசான ஏர்லைன்ஸ் இதுதான். 

அதிகப்படியான நகரங்களுக்கு சேவை வழங்குவது, அகலமான உடலமைப்பு கொண்ட விமானங்கள் போன்றவை, வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள, உங்களை அந்த நிறுவனத்தை தேர்வு செய்ய வைக்கும் காரணிகளாகும். 

இந்த கட்டுரை, பிற விமான நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு உடையவை என்று சொல்லவரவில்லை. அதேநேரம், மேற்சொன்ன 5 நிறுவனங்களும் பாதுகாப்பு அம்சங்களில் மிகவும் சிறப்பானவை என்பதையே குறிப்பிடுகிறது. 

இனி என்ன.. அடுத்த முறை உங்கள் விடுமுறை காலத்தை கழிக்க எந்த விமான நிறுவனத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது உங்களுக்கே தெரிந்திருக்குமே. உங்களது அபிமான ஏர்லைன் இந்த பட்டியலில் உள்ளதா? எங்களோடு ஷேர் செய்யுங்கள்!

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.