Breaking News
recent

ரூ.5-க்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்... அனைத்து ரயில் நிலையங்களிலும்.!


ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குளிர்ந்த குடிநீரை,  ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து ரயில்வே நிர்வாகம் ரூ.5-க்கு விற்பனை செய்துவரும் திட்டத்தை, அனைத்து ரயில் நிலையங்களிலும் அமல்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

ரயில் பயணத்தின் போது  குடிநீரை, ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குழாய்களிலோ அல்லது கடைகளில் அதிக விலை கொடுத்தோதான் பெற வேண்டிய நிலை இருக்கிறது. 

ரயில்வே நிர்வாகம் விற்பனை செய்துவரும் ரயில் நீரின் விலை,  தனியார் நிறுவன குடிநீரின் விலைக்கு இணையாகவே இருக்கிறது. 

இந்த நிலையில், மலிவான விலையில் சுத்திகரிக்கப்பட்ட குளிர்ச்சியான குடிநீர் ரயில் பயணிகளுக்கு கிடைப்பதற்கு ஏற்றவாறு புதிய தண்ணீர் இயந்திரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து ரயில்வே நிர்வாகம் இந்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை அனைத்து ரயில் நிலையங்களிலும் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

“ரயில் பயணிகள் இந்த இயந்திரத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குளிர்ச்சியான குடிநீரை ஒரு லிட்டர் ரூ.5 என்ற விலையில் பெறுவதற்கு ஏதுவாக இந்த திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

 நாடு முழுவதும் இதுபோல் 7 ஆயிரம் தண்ணீர் இயந்திரங்களை ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து ரயில்வே நிர்வாகம் நிறுவ திட்டம் தீட்டப்பட்டு, அதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தெற்கு ரயில்வேக்குட்பட்ட சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த திட்டம் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. 



தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 7 இயந்திரங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இன்னும் 6 எந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. 

இதேபோல், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 10 எந்திரங்களை நிறுவுவதற்கான அனுமதி பெறப்பட்டு, அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 

ஒரு மாதத்துக்குள் அந்த பணிகள் முடிவடையும்” என  அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.