Breaking News
recent

துபையில்ரூ.4 கோடி கார் டயர்கள் கின்னஸ் சாதனை.!


துபையில் 24 காரட் தங்கம், உயர்தரமான வைரங்கள் ஆகியவை பதிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள 4 கார் டயர்கள், மொத்தம் ரூ.4 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதனால், உலகின் மிக விலையுயர்ந்த கார் டயர்கள் என்ற அடிப்படையில், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இந்தத் தயாரிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த விலை உயர்ந்த டயர்களை, "ஜெனீஸஸ் டயர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஹர்ஜீவ் கந்தாரி, வெளிநாடுவாழ் இந்தியர் ஆவார்.

துபையில் வடிவமைக்கப்பட்ட விலை உயர்ந்த டயர்கள், இத்தாலியைச் சேர்ந்த ஆபரணக் கைவினைக் கலைஞர்களின் உதவியுடன் அழகுபடுத்தப்பட்டன.

துபையில் நடைபெற்ற உலக டயர் வர்த்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இந்த டயர்கள், 2.2 மில்லியன் திராம்ஸ் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4.01 கோடிக்கு) விற்பனை செய்யப்பட்டதாக அந்த நிறுவனத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டயர் விற்பனை மூலமாகக் கிடைத்துள்ள லாபத்தை, உலகம் முழுவதும் கல்விச் சேவையில் ஈடுபட்டு வரும் ஜெனீஸஸ் ஃபவுண்டேஷனுக்கு நன்கொடையாக அளிக்க இருப்பதாக ஹர்ஜீவ் கந்தாரி கூறினார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.