Breaking News
recent

20 லட்சம் பயணிகள் குவியப் போகிறார்கள்.. பரபரப்பாகும் துபாய் விமான நிலையம்.!


ஜூன் கடைசி மற்றும் ஜூலை முதல் வாரத்தில் துபாய் சர்வதேச விமான நிலையத்தை கிட்டத்தட்ட 20 லட்சம் பயணிகள் வரை பயன்படுத்தக் கூடும் என்று எதிர்பார்ப்பதால் பயணிகள் வழக்கமான நேரத்தை விட முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வந்து விடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

ஜூன் 30ம் தேதி வார இறுதி தொடங்குகிறது. துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோடை விடுமுறையும் தொடங்குகிறது. மேலும் ரம்ஜானும் வரவுள்ளது. ஜூலை 7ம் தேதி மிகப் பெரிய அளவில் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே இந்த சமயத்தில் மிகவும் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு பயணிகள் வந்து விடுவது நல்லது என்று விமான ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

கோடை விடுமுறை... 
கோடை விடுமுறை, ரம்ஜான் காரணமாக மிகப் பெரிய அளவில் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதும் என்பதால் ஏற்பாடுகள் அதற்கேற்ப முடுக்கு விடப்பட்டுள்ளன. மேலும் வெளிநாட்டவர் இந்த சமயத்தில் பெருமளவில் தங்களது சொந்த நாடுகளுக்குப் போவார்கள் என்பதால் கூட்டம் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

கூடுதல் தொழிலாளர்கள்... 
பீக் சமயம் இதுதான் என்பதால் கூடுதல் தொழிலாளர்களை வைத்து விமான நிலையம் செயல்படும். குறிப்பாக ஜூன் 30 முதல் ஜூலை 3 வரையிலும், ஜூலை 7 முதல் 10ம் தேதி வரையிலும் கூட்டம் மிகப் பெரிய அளவில் இருப்பது வழக்கமாகும்.

சவால்... 
இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 20 லட்சம் பயணிகள் விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அதைக் கட்டுப்படுத்துவதும் சவாலுக்குரியதாக இருக்கும்.

துபாய் விமான நிலையம்... 
உலகின் மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்று துபாய் சர்வதேச விமான நிலையம். உலகின் மிகப் பெரிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் துபாயை தலைமையிடமாகக் கொண்டுதான் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.