Breaking News
recent

12 மில்லியன் குழந்தை திருமணம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. பெரும்பான்மையினர் இந்துக்கள்.!


இந்தியாவில் 10 வயதுக்குட்பட்ட 12 மில்லியன் குழந்தைகளுக்கு திருமணம் நிகழ்ந்துள்ளது என்றும் அதில் 84% பேர் இந்துக்கள் என்றும் 11% பேர் முஸ்லிம்கள் என்றும் சமீபத்தில் India Spend வெளியிட்டுள்ள ஒரு கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஜம்மு கஷ்மீரின் மக்கள் தொகையின் எண்ணிக்கையாகும்.

இந்த தகவலின்படி 2011 வரையிலான இந்த 12 மில்லியனில் 7.84 மில்லியன் சிறுமிகள் என்றும் 10 குழந்தைகளில் 8 பேர் சிறுமிகள் என்றும் இந்த கணக்கெடுப்பு வாயிலாக அறிய முடிகின்றது.
இன்னும் இத்தைகைய குழந்தை திருமணங்களில் 72% சிறுமிகள் கிராமங்களை சார்ந்தவர்கள் என்றும் இந்த விகிதாச்சாரம் முஸ்லிம் சமூகத்தில் 58.5% எனவும் அவ்வறிக்கை தெரிவிகின்றது.

ஏழு மாநிலங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஜைன மத பெண்கள் சராசரியாக 20.8வயதில் திருமணம் முடிப்பதாகவும், இதற்கு அடுத்தபடியாக கிறிஸ்தவர்கள் 20.6 வயதில் திருமணம் முடிப்பதாகவும் அறியப்படுகின்றது. முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் சராசரியாக 16.7 வயதில் திருமணம் முடித்துகொள்கின்றனர்.

நகரங்களில் வாழும் பெண்கள் கிராமங்களில் வாழும் பெண்களை விட சராசரி இரண்டு வருடம் கழித்து திருமணம் முடிகின்றனர். 30% ஆண்களும் 42% பெண்களும் தங்களது திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதிற்கு முன்னதாக திருமணம் முடிகின்றனர் என்று இந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த வயது வரம்பு முஸ்லிம்களுக்கு வேறுபடும். 

முஸ்லிம்களை பொறுத்தவரை முஸ்லிம் தனியார் சட்டத்தின்படி ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டாலோ அல்லது 15 வயது நிரம்பி இருந்தாலோ திருமணம் முடித்துக்கொள்ளலாம் என்று குஜராத் உயர்நீதி மன்றமும், டில்லி உயர் நீதி மன்றமும் வெவ்வேறு தீர்ப்புகளில் தெரிவித்துள்ளன.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.