Breaking News
recent

குவைத்தில் தொழில்( Visa, Transfer)Iqama மாற்றம் செய்யும் புதிய கட்டணமுறை நடைமுறைக்கு வந்தது.!


குவைத்தில் தொழில்( Visa, Transfer)Iqamaமாற்றம் செய்யும் புதிய கட்டணமுறை நடைமுறைக்கு வந்தது: முதல் கட்டமாக தனியார் எண்ணெய் நிறுவனங்களில் வேலை செய்யும் நபர்கள் இது பொருந்தும்:

குவைத்தில் தொழில்( Visa, Transfer)Iqamaமாற்றம் செய்யும் புதிய கட்டணமுறை நடைமுறைக்கு வந்துள்ளது, இதன் படி
முதல் கட்டமாக தனியார் எண்ணெய் நிறுவனங்களில் வேலை செய்யும் நபர்கள் இந்த புதிய கட்டணம் பொருந்தும்.


இந்த புதிய நடைமுறை தொழில் துறை அமைச்சகம் கடந்த ஆண்டு வெளியிட்ட 842 நம்பர் உத்தரவு படி நடைமுறைக்கு வந்துள்ளது.
இதை தவிர வெளிநாட்டினருக்கு நன்மை தரும் சில மாற்றங்களும் நடைமுறைக்கு வந்துள்ளது. 


இதன் படி தனியார் துறையில் பணிபுரிபவர்கள் 300 குவைத் தினார் கட்டணம் செலுத்தினால் ஒரு வருடம் முடிவதற்கு முன்னர் Visa மாற்றம் செய்ய அனுமதி வழங்கபடும்அரசு துறைகளில் வேலைக்கு
தேர்வு செய்யபட்டு வேலை செய்யும் நபர்கள் இதே கட்டணம் செலுத்தினால் வேறு துறையில் வேலைக்கு மாற்றம் பெறலாம்.


இதை தவிர Visa காலாவதி உள்ளதோ இல்லாததோ ஆக உள்ள நபர்கள் 350 குவைத் தினார் செலுத்தினால் மற்றோரு Sponsore-க்கு கீழ் உள்ள கம்பனிக்கு visa மாற்றம் செய்யலாம்.இதகைய visa மாற்றம் மற்றொரு அரசு துறையாக இருந்தால் 300 தினார் செலுத்த வேண்டும்.


அரசு சம்பந்தமான visa-வில் உள்ள நபர்கள் அதே Sponsore-யின் கீழ் உள்ள மற்றொரு அரசு துறை வேலைக்கு visa மாற்றம் செய்ய 200 தினார் செலுத்த வேண்டும்.இந்த செய்தி குவைத் பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டுள்ளது என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.