Breaking News
recent

துபாயில் EIFF நடத்தும் குழந்தைகளுக்கான Get Set Goal…! பெற்றோர்களுக்கான Parenting by Horns…! குடும்ப சங்கம நிகழ்ச்சி.!


அமீரகத்தில் சமூக சேவைகள் பலவற்றை செய்து வரும் EIFF என்ற எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் வருடா வருடம் குடும்ப சங்கம நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (மே 06, 2016) குடும்பங்கள் குதூகலமாக சங்கமிக்கும் வித்தியாசமான குடும்ப சங்கம நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
Parenting
“உங்கள் குழந்தைகளைக் கட்டியெழுப்புங்கள்!”, “உங்கள் மறுமை வெற்றிக்காக முதலீடு செய்யுங்கள்!” என்ற அடிப்படையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை “புரூஜ் ரியலைஸேஷன்” நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாகியுமாகிய தாவூத்  வெய்த் அவர்கள் நடத்துகிறார்.
அஜ்மான் அல் ஜுர்ஃப் பகுதியிலுள்ள இண்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூலில் நடைபெறும் இந்நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு மாலை 7 மணிக்கு தொடங்கும்.
இதற்கு முன்பாக அதே கல்விக்கூடத்தில் மாலை 5 மணிக்கு குழந்தைகளுக்கான Get Set Goal என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Get Set Goal

குழந்தைகள் என்ன இலக்கை நோக்கி செல்கின்றனர்?, குழந்தைகளின் வாழ்க்கையில் குறிக்கோளை அமைத்துக்கொள்ளும் வழிமுறைகள், இலக்கை அடைந்து வெற்றிக் கனியைப் பறிப்பது எப்படி?, பெற்றோர்களை எப்படி மதித்து நடப்பது?, நேரத்தின் மதிப்பு என்ன? போன்ற விடயங்கள் இந்தப் பயிலரங்கில் மாணவ மாணவியருக்கு பயிற்றுவிக்கப்படும். (வயது வரம்புகள் : குரூப் 1 : வயது 6 முதல் 9 வரை. குரூப் 2 : 9 வயது முதல்.)
 
அமீரகவாழ் தமிழ் மக்கள் அனைவரையும் குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறு எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்க: Mr. Munavvar 055 – 2845561.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.