Breaking News
recent

சரியான அளவு உறங்காமல் இருப்பதால் சந்திக்கும் உடல்நலப் பிரச்சனைகள்.!


தூங்கும்போதுதான் மூளைக்கு பெரிதாக, மற்ற எந்த வேலையும் இருக்காது. அந்த அமைதியான நேரத்தில் அது மூளையில் தேங்கியிருக்கும் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றும். போதிய அளவு ரெஸ்ட் எடுக்கும். மறு நாள் ஃப்ரெஷாக எழுந்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக அதன் வேலைகளை கவனிக்கும்.

நாம் தூங்காமல் இருக்கும்போது அல்லது மிகக் குறைந்த அளவு தூங்கும்போது அதன் வேலைகளை சரிவரச் செய்யாமல் சோர்வாகி விடும். அதனால்தான் நம்மால் அடுத்த நாள் சுறுசுறுப்பாக இயங்க முடிவதில்லை.

இப்படிப்பட்ட முக்கிய உறுப்பான மூளையின் ரொட்டீன் வேலையை பாதிக்கும்படி நாம் நடந்து கொள்ளும்போது , அதுவும் பாதித்து , அதனால் மற்ற உறுப்புக்களையும் பாதிப்படையச் செய்யும் என்பது உண்மை. View Photos ஒருவரின் தூக்க அளவு அவரின் வயது , உடல் நிலை , பழக்கவழக்கங்கள், உட்கொள்ளும் உணவு அகியவற்றைக் கொண்டு மற்றவரிடமிருந்து மாறுபடுகிறது.

எப்படி இருந்தாலும் பொதுவாக குறைந்தது 7-8 மணி நேரம் தூக்க அவசியம் என்று நேஷனல் ஃபவுண்டேஷன் கூறுகிறது. 

தூங்காமல் இருப்பதால வரும் 10 பின்விளைவுகள்: 

உங்கள் ஞாபக திறமையை பாதிக்கும் : 

தூங்காமல் இருந்தால், கவனக் குறைவு, ஞாபக மறதி, உடல் சோர்வடைதல் ஆகியவை வரும் என Neuro psychiatric Disease and Treatment என்ற இதழ் 1997 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதே போல் கற்பதிலும் ஆர்வம் குறைந்து விடும். நீண்ட மற்றும் குறுகிய கால ஞாபக மறதி ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

இதயத்திற்கு ஆபத்து : 

நாம் தூங்கும் போது சமயங்களில் இதயத்திற்கு அதிக ரத்தம் தேவைப்படாது. அந்த நேரத்தில்தான் நம் உடல் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை சரி செய்யும். 

இதுவே ஹெல்தியாக இதயம் இருக்கக் காரணம். ஆனால் தூங்காமல் இருக்கும் போது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எழுகிறது. அதுவும் தூங்காமல் இருக்கும் ஒருவருக்கு குடிப்பழக்கம், உடல் பருமனும் கூடவே இருந்தால், அவர்களை இதய நோய்கள் சீக்கிரத்தில் தாக்கும். 2011 ஆம் ஆண்டு யுரோப்பியன் ஹார்ட் ஜர்னல் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 7- 8 மணி நேரம் தூங்கினால் ஹார்ட் ஸ்ட்ரோக் வராமல் தடுக்கலாம் என்றுள்ளது. 

எதிர்ப்புத் திறன் குறைவாகும்: 

நாம் தூங்கும்போதுதான் நம் உடலில் இயங்கும் எதிர்ப்பு செல்கள் சைட்டோகைன் என்ற புரோட்டினை வெளியிடுகிறது. இந்த சைட்டோகைனுடம் ஆன்டிபாடிஸ் களும் சேர்த்து நம் உடலுக்குள் வரும் கிருமிகளை எதிர்த்து போராடி அவற்றை வெளியேற்றுகிறது. நாம் சரியாக தூங்கவில்லையென்றால் , சைட்டோகைன் சுரக்காமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய்கள் உருவாகக் காரணமாகிவிடும்.

மன அழுத்தம் உருவாகும்: 

நாம் தொடர்ந்து தூங்காமல் இருக்கும் போது மன அழுத்தம் ஏற்படும் என நிறைய மருத்துவ ஆய்வுகள் கூறி வருகின்றன. தேவையில்லாத கோபங்கள் , குழப்பங்கள் உருவாகி , மன அழுத்தம் ஏற்பட்டு அன்றாட வேலையை பாதிக்கச் செய்யும் என தெரிய வருகிறது. 

தூங்காமல் இருந்தால் உடல் பருமன் அதிகரிக்கும் : 

தூங்கினால் உடல் பருமன் அதிகரிக்கும் என்பது தவறு. நன்றாக தூங்கினால் பசியும் மற்ற வளர்சிதை மாற்றங்களும் ஒழுங்காக நடைபெறும். இதனால் தேவையான கலோரிகள் எரிந்து உடலை இளைக்க வைக்கும். ஆனால் சரிவர தூங்காமல் இருந்தால் உடல் எடை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? தூங்காமல் இருக்கும் போது க்ரெலின் என்ற ஹார்மோன் அதிகம் சுரக்கும். இது கலோரிகளை அதிகரிக்கச் செய்து உடல் எடையைக் கூட்டும். 

சர்க்கரை வியாதி ஆபத்தும் உள்ளது : 

6 மணி நேரத்திற்கும் குறைந்த தூக்கம் இருந்தாலோ அல்லது 9 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்கினால் இன்சுலின் ஹார்மோனின் அளவு குறைந்து சர்க்கரை வியாதி வரும் ஆபத்து உள்ளது என 2005 ஆம் ஆண்டு ஒரு மருத்துவ இதழ் ஆய்வினை வெளியிட்டுள்ளது. 

சருமத்தை பாதிக்கும் : 

சரிவர தூக்கம் இல்லாத போது நம் உடல் கார்சிடால் என்கின்ற ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்கிறது. இது முகத்தில் இருக்கும் நெகிழ்வுத்தன்மையை போக்கி ஒரு இறுக்கத்தை சருமத்திற்கு தருகிறது. இதுவே சுருக்கம், கண்களுக்கு கீழே மெல்லிய கோடுகள், கருவளையம் ஆகியவைகளைத் தரும். இதனால் சீக்கிரம் வயதான தோற்றத்தை கொடுக்கும். ஆகவே குறைந்தது 7 மணி நேர தூக்கமாவது அவசியம். 

ஆயுள் குறையும் : 

தொடர்ந்து குறைவான தூக்கம் தூங்குபவர்களுக்கு ஆயுள் குறைவு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதய சம்பந்தமான முக்கிய பிரச்சனைகளுக்கு தூக்கம் இல்லாததும் ஒரு காரணம். மற்ற உடல் உபாதைகளும் மெல்ல ஆரம்பித்து சீக்கிரத்தில் மரணம் வந்துவிடும் என அச்சுறுத்துகின்றனர். ஆகவே நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டுமென்றால் நன்றாக தூங்குங்கள். 

விபத்துக்களை சந்திக்க நேரிடலாம் : 

நீங்கள் நன்றாக கவனித்தீர்களேயானால் சரிவர தூக்கம் இல்லாதவர்கள்தான் நிறைய விபத்துக்குள்ளாகிறார்கள். போதிய அளவு எச்சரிக்கைக் தன்மை குறைந்து விபத்தினை சந்திக்க நேரிடும்.

உடலுறவில் நாட்டமின்மை : 

தொடர்ந்து தூக்கம் இல்லாமல் இருப்பவர்களுக்கு உடலுறவில் நட்டமில்லாமல் போய்விடும். அதே போல் ஆண்களின் உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைந்துவிடும் என 2002 ஆம் ஆண்டு இஸ்ரேல் இன்ஸ்டிட்யூட் ஒன்று ஆய்வில் தெரிவித்துள்ளது.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.