Breaking News
recent

வரி செலுத்துவோரின் குறைகளை விரைவாக தீர்க்க இ-நிவாரண் - புதிய வசதி அறிமுகம்.!


வரி செலுத்துவோரின் குறைகளை விரைவாக தீர்ப்பதற்கு சிறப்பு மின்னணு குறை தீர்ப்பு முறையை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இ-நிவாரண் என்ற பெயரிலான இந்த குறை தீர்ப்பு முறை மூலம் வரி செலுத்துவோர் தங்களது குறைகளைத் தெரிவிக்க முடியும். 

இ நிவாரணானது மின்னணு முறையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வசதியானது வருமான வரித்துறையின் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.

இ நிவாரண் வசதியின் மூலம் ஆன்லைன் மூலமான புகார்கள் மற்றும் வரி செலுத்துவோர் நேரடியாக கூறும் புகார்கள் அனைத்திற்கும் இதில் பதில் கூறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இ நிவாரணில் வரி செலுத்துவோரின் புகார் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்க மதிப்பீட்டு அதிகாரி இருப்பார். 


காகிதம் இல்லாத சூழலை உருவாக்கும் பொருட்டு இந்த இ நிவாரண் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இ-நிவாரண் வசதி மூலம் வழக்கமான குறைகளை பதிவு செய்த பின், குறிப்பிட்ட குறை மீது இறுதி நடவடிக்கை எடுக்கப்படும் வரை கண்காணிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.