Breaking News
recent

போபால் 'காயத்ரி' கோவிலுக்குள் தொழுகையை நிறைவேற்றிய முஸ்லிம்கள்.!


போபால் 'காயத்ரி' கோவிலுக்குள் தொழுகையை நிறைவேற்றிய முஸ்லிம்கள் !

ஒத்துழைத்த ஹிந்துக்கள் !!

மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் உள்ள பிரபல காயத்ரி கோவிலில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முஸ்லிம்கள், கோவிலுக்கு உள்ளேயே தொழுகையை நிறைவேற்றினர்.

"World Organization Of Religious Knowledge" என்ற அமைப்பின் சார்பில், நேற்றைய தினம் (15/05) 'காலத்தின் வளர்ச்சியும் மதங்களின் பங்களிப்பும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

போபால் நகரத்தின் மையப்பகுதியான 'சக்திப்பேட்டை' யில் அமைத்துள்ள, பிரபல காயத்ரி கோவிலில் வைத்து நடந்த இக்கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு முஸ்லிம்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருந்த வேளையிலேயே, 'மக்ரிப்' தொழுகைக்கான நேரம் வந்து விட்டதை தொடர்ந்து, முஸ்லிம்கள் தொழுது விட்டு மீண்டும் வருவதாக கூறி வெளியே புறப்பட தயாராயினர்.

அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில், அங்கிருந்த ஹிந்து சமுதாய மக்களும், விழா ஏற்பாட்டாளர்களும், கோவிலுக்கு உள்ளேயே, காயத்ரி சன்னதியிலேயே, பிரசங்கம் நடந்துக் கொண்டிருந்த ஹாலுக்குள்ளேயே தொழுகைக்கான ஏற்பாட்டை செய்து கொடுத்தனர்.

எவ்வித சலனமும் இல்லாமல் தொழுகையை நிறைவேற்றிய முஸ்லிம்கள், தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டனர்.

'காலத்துக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம்' என்ற தலைப்பில், முஸ்லிம் பிரமுகர் அப்துல்லாஹ் தாரிக் என்பவரும் இதில் உரையாற்றினார், என்பதும் குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.