Breaking News
recent

சட்டமன்றத்தில் இஸ்லாமிய அடையாளங்கள்.!


முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் தொப்பியுடன் சட்டமன்றத்துக்கு வந்ததைப் பார்த்து மனம் மகிழ்ச்சி அடைந்தது. அது நான் ஓரளவு எதிர்பார்த்ததுதான்.
ஆனால் நான் எதிர்பாராத ஒன்றும் நடந்தது.
வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நிலோஃபர் கபீல் அமைச்சராகப் பதவி ஏற்கும்போது பெரும்பாலும் கறுப்புப் பர்தா அணிந்திருக்க மாட்டார் என்றுதான் நினைத்தேன். 
ஆனால் அவர் பர்தா அணிந்தபடியே பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டதைப் பார்த்து உண்மையிலேயே வியந்துதான் போனேன்.
“தொப்பியிலும் பர்தாவிலும் தாடியிலும்தான் இஸ்லாம் இருக்கிறதா?” என்று கேட்டால் நிச்சயமாக இல்லைதான். ஆயினும் முஸ்லிம்களுக்கான தனித்துவம் மிக்க, கண்ணியமான அடையாளங்கள் பொதுவெளிகளில்- குறிப்பாக, சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் பின்பற்றப்படும்போது-கண்கள் குளிரத்தான் செய்கின்றன.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.