Breaking News
recent

சார்ஜாவில் தொழில் துவங்க அதிக அளவில் வாய்ப்புகள்.!


பெங்களூருவிலுள்ள தனியார் ஓட்டலில் சார்ஜா அரசின் சார்பில் தொழில் வளர்ச்சி கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் கர்நாடக வர்த்தக சபை தலைவர் தல்லம் ஆர் துவாரகநாத் மற்றும் முன்னாள் தலைவர்கள் பாபு, சம்பத்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கர்நாடக வர்த்தக சபை முன்னாள் தலைவர் சம்பத்ராமன் கூறியதாவது:

இந்திய தொழில் அதிபர்களுக்கு சார்ஜாவில் சிறந்த வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக உற்பத்தி தொழிலுக்கு தகுந்த காலநிலை நிலவுகிறது. இதற்கான அனுமதி மட்டும் இன்றி அடிப்படை வசதிகளும் உள்ளன. 


சார்ஜாவில் தொழிற்சாலைகளை அமைத்து அங்கேயிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இருப்பதால் இந்த வாய்ப்பினை நமது தொழில் அதிபர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.