Breaking News
recent

கர்ப்பிணி தாய்மார்களும், ரமழான் நோன்பும்.!


ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­ப­தனால் ஏற்­படும் அதி­க­மான நற்­பே­று­களை உணர்ந்த கர்ப்­பிணி மற்றும் பாலூட்டும்  தாய்மார்  ரம­ழானில் நோன்பு நோற்­பதில்  அதிகம் ஆர்வம் உள்­ள­வர்­க­ளாக இருக்­கின்­றனர். 

நோன்பு நோற்­கா­விட்டால் ஒரு பாவ­மாக ஆகி­வி­டுமோ என்ற குற்ற உணர்வில் பல சங்­க­டங்­க­ளையும் பொறுத்துக் கொண்டு பலர் நோன்பு நோற்­கின்­றனர் .

இவர்கள் இவ்­வாறு நோன்பு நோற்­ப­தைப்­பற்றிச் சற்று நோக்­குவோம்.

இலங்­கையில் நோன்பு நோற்­கும்­போது பதின்­மூன்று மணி நேரம் எதுவும் உண்­ணா­மலும் பரு­கா­மலும் இருக்க வேண்டும். 

இவ்­வாறு நீண்ட நேரம் பட்­டி­னி­யாக இருந்தால் கர்ப்­பி­ணி­யான தாய்க்கோ அல்­லது அவ­ரது வயிற்றில் இருக்கும் சிசு­வுக்கோ ஏதா­வது பாத­கங்கள் ஏற்­ப­டுமா?

1964 -– 84 காலப்­ப­கு­தியில் இங்­கி­லாந்தின் பேர்­மிங்ஹம் பகு­தியில் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­றோ­ருக்குப் பிறந்த 13,351 குழந்­தை­களின் பிறப்பு நிறையை  முஸ்லிம் அல்­லாத குழந்­தை­களின் பிறப்பு நிறை­யுடன் ஒப்­பிட்­ட­போது எந்­த­வி­த­மான வித்­தி­யா­சங்­களும் காணப்­ப­ட­வில்லை.. 

இவ்­வாறு பல ஆய்­வுகள் ரமழான் மாத நோன்­பினால்  சிசுவின் பிறப்பு நிறையில் எந்த வித­மான குறைவும் ஏற்­ப­டு­வ­தில்லை என்று நிறுவி உள்­ளன.

கர்ப்­ப­கா­லத்தில் நோன்பு நோற்­றோரின் பிள்­ளை­களின் கல்வி நிலையை அவ­தா­னித்­த­போது அந்த சிறு­வர்­களின் விவேக ஈவில் (IQ) எந்த வித குறை­பாடும் காணப்­ப­ட­வில்லை. 

இஸ்­லாத்தின் நிலைப்­பாடு
அல்­குர்ஆன் இரண்டாம் அத்­தி­யாயம்  183, 184, 185  ஆம் வச­னங்­களில்  நோன்­பைப்­பற்றி இவ்­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

“...ஆனால் (அந்த நாட்­களில்) எவ­ரேனும் நோயா­ளி­யா­கவோ, அல்­லது பய­ணத்­திலோ இருந்தால் (அவர் அக்­கு­றிப்­பிட்ட நாட்­களின் நோன்பைப்) பின்னர்  நோற்க வேண்டும்; எனினும்(கடு­மை­யான நோய், முதுமை போன்ற கார­ணங்­க­ளினால்) நோன்பு நோற்­பதைக் கடி­ன­மாகக் காண்­ப­வர்கள் அதற்குப் பிரா­யச்­சித்த தான­மாக  ஏழைக்கு உண­வ­ளிக்க வேண்டும்”

இந்த வச­னங்­களை கர்ப்­ப­வ­தி­யான பெண்கள் எப்­படி எடுத்­துக்­கொள்­வது? 
(a)கர்ப்­பி­ணி­யான பெண்ணை ஒரு சிறிது கால நோயா­ளி­யாகக் கரு­தினால் அவர்  ரம­ழானில் நோன்பை விட்டு விட்டுப் பின்னர் அவற்றை நோற்க வேண்டும். 

(b)அவர்­களைக் கடுமை­யான நோயா­ளி­­க­ளாகக்  கரு­தினால் நோன்பு நோற்கத் தேவை­யில்லை. ஆனால் ஏழைக்கு உண­வ­ளிக்க  வேண்டும். 

(c)கர்ப்­பி­ணிக்கு எந்த வித சங்­க­டமும் இல்­லை­யென்றால் அவர் ரம­ழானில் நோன்பு நோற்க வேண்டும். 

(d)கர்ப்­பி­ணியைப் பற்றி எது­வுமே குறிப்­பி­டப்­ப­டா­ததால் அவர் ரம­ழா­னிலோ அல்­லது அதன் பின்­னரோ  நோன்பு நோற்கத் தேவை இல்லை. பிரா­யச்­சித்த தானம் கொடுக்கத் தேவையும் இல்லை .

இந்த நான்கு அபிப்­பி­ரா­யங்­களில் எது ஏற்­பு­டை­யது? 
கர்ப்­ப­வ­தி­யான பெண்­களும் பாலூட்டும் தாய்­மாரும்  நோன்பு நோற்கத் தேவை இல்லை என்று அநேக ஹதீஸ்­களில்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதி­வி­லக்கு அளித்­துள்­ளார்கள். (உதா­ர­ண­மாக Sunan Ibn Majah  English Ref: Vol.1, Book 7, Hadith 1666, Sunan Abi Dawud English Ref. Book 13, Hadith 2401.) 

இப்­ப­டி­யாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சலுகை அளிப்­ப­தற்­கான காரணம் என்ன?

நிறைந்த தேகா­ரோக்­கியம் மிக்க  ஒரு­வ­ருக்கு ரமழான் நோன்­பினால் அநேக மருத்­துவ நன்­மைகள் கிடைக்­கின்­றன. ஆனால் கர்ப்­பி­ணி­யான ஒரு பெண்ணை நிறைந்த ஆரோக்­கியம் உள்ள ஒரு­வ­ராகக் கருத முடி­யாது . கர்ப்­ப­கால இரத்த அழுத்தம் (preeclampsia), நீரி­ழிவு (Gestational diabetes mellitus), இரத்தக் குறைவு(Anaemia)  போன்ற பல நோய்­களால் அவர்கள்  பாதிக்­கப்­ப­டு­கின்­றார்கள். அதி­க­மான  தளர்வு, களைப்பு மற்றும் சோர்வு நிலை என்­ப­வற்றால் அவ­தி­யு­று­கின்­றார்கள். நோன்பு நோற்­கும்­போது  இவை­களின் பாதிப்­புக்கள்   அதி­க­மா­கின்­றன. 

நோன்பு நோற்கும் கர்ப்­ப­வ­தி­யான பெண்­களில் வயிற்றுக் குமட்­டலும் வாந்­தியும் (vomiting) அதிக அளவில் ஏற்­பட வாய்ப்­புக்கள் உண்டு. நீரைக் குறை­வாகக் குடிப்­ப­தாலும் அதிக நேரம் பரு­காமல் இருப்­ப­தாலும் சிறு­நீ­ரகத் தொகு­தியில் கிரு­மிகள் தொற்ற வாய்ப்­புண்டு.

சிசுவின் சுவாச அசை­வுகள் குறை­யலாம் என்று சிலர் கரு­து­கின்­றார்கள். அதே­நே­ரத்தில் இப்­ப­டி­யான நோய்கள் இடம்­பெற வாய்ப்­பிலை என்றும்  சிலர் கரு­து­கின்­றார்கள்

கர்ப்ப காலத்­தின்­போது அதிக நேரம் பட்­டி­னி­யாக இருந்தால் அந்தக் குழந்­தைகள் பிற்­கா­லத்தில் இரு­தய நோய், இரத்த அழுத்தம் மற்றும் நீரி­ழிவு போன்ற நோய்­களால் பாதிக்­கப்­ப­டலாம் என்று கரு­தப்­ப­டு­கின்­றது. ஆனால் பதி­னைந்து மணி நேரத்­திற்கும் குறை­வாக நோன்பு நோற்­கும்­போது இந்தத் தாக்­கங்கள் ஏற்­ப­டாது. 

கர்ப்­ப­வ­தி­யான பெண்கள் நோன்பு நோற்­பதால் குழந்­தை­க­ளுக்குக் குறு­கிய காலங்­களில் ஏற்­படும் விளை­வு­க­ளைப்­பற்­றித்தான் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளதே தவிர நீண்ட கால விளை­வுகள் பற்றி முறை­யான ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்­கிய சலு­கையைப்  பல­வி­த­மாக அர்த்தம் கொள்­கின்­றார்கள். 

(a)தாய்க்கோ அல்­லது கருவில் உள்ள சிசு­வுக்கோ ஆபத்­துக்கள் விளை­யக்­கூ­டிய சூழல் இருந்தால் மட்­டுமே  நோன்பு நோற்கத் தேவை இல்லை. இப்­ப­டி­யான அபா­யங்கள் இல்­லா­விடில் கட்­டாயம் நோன்பு நோற்க வேண்டும் என்று ஒரு சாரார் கரு­து­கின்­றார்கள் 
(b) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதி­வி­லக்கு அளித்­துள்­ளதால் கர்ப்­ப­வ­திகள் நோன்பு நோற்க வேண்­டிய அவ­சி­யமே இல்லை என்று இன்­னு­மொரு  சாரார் கரு­து­கின்­றார்கள்.

நோன்பு நோற்­கா­விட்டால் என்ன செய்ய வேண்டும்?
ரமழான் மாதத்தில் கர்ப்­ப­வ­திகள்  நோன்பு நோற்­கா­விட்டால் பிள்ளை பெற்­ற­பின்னர் அவர்கள் செய்ய வேண்­டி­யது என்ன? இவை பற்றி நான்கு  வித­மான அபிப்­பி­ரா­யங்கள் கூறப்­ப­டு­கின்­றன

(a)பிள்ளை பெற்ற பின்னர் விடு­பட்ட அத்­தனை நோன்­பு­க­ளையும் கணக்­கிட்டு நோற்க வேண்டும். அத்­துடன் விடு­பட்ட நாள் ஒன்­றுக்கு 750 கிராம் வீதம் அரி­சியைத் தான­மாக வழங்க வேண்டும். (Minhaju 's-Salihiyn, vol. 1, p. 334). 

நான்கு மத்­ஹ­பு­களின் இமாம்­களும் கர்ப்­ப­வ­திகள் ரமழான் மாதத்தில் நோன்பு  நோற்­காமல் விட்டால் பின்னர் விடு­பட்ட  நோன்­பு­களைக் கணக்­கிட்டு நோற்க வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­து­கின்­றார்கள். ஆனால் அரி­சியைத் தான­மாகக் கொடுப்­பதில் கருத்து வேறு­பா­டுகள் உள்­ளன. 

(b) விடு­பட்ட நாள் ஒன்­றுக்கு 750 கிராம் வீதம் அரி­சியைத் தான­மாக வழங்­கினால் போது­மா­னது. நோன்பு நோற்கத் தேவை இல்லை என்று சிலர் கரு­து­கின்­றார்கள்.

கர்ப்­ப­வ­தியோ அல்­லது பாலூட்டும் பெண்ணோ நோன்பு நோற்­பதைக் கஷ்­ட­மாகக் கரு­தினால் அவர்கள் தானம் கொடுத்தால் போது­மா­னது. பின்னர் அந்த நோன்­பு­களை நோற்கத் தேவை இல்லை என்று At-Tabari in His Tafsîr (Exegesis) (hadith 2318). Al-Albâni said in “Al- Irwâ'“ (4/19), Abu Dâwûd (hadith 2318), ,At-Tabari in His Tafsîr (Exegesis) (2/136), and Ad-Dâraqutni in his “Sunan” (2/206) என்­ப­ன­வற்றில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

றமழான் காலத்தில் கர்ப்­ப­மாக இருந்த தன்­னு­டைய மனை­வி­யிடம் இப்ன் உமர் (ரழி ) அவர்கள், நோன்பு நோற்கத் தேவை இல்லை. பின்னர் அதைக் கணக்­கிட்டு நோற்­கவும் தேவை இல்லை. ஆனால் தானம் வழங்­கு­மாறு குறிப்­பிட்­ட­தாக Ad-Dâraqutni in his “Sunan” (2/207). இல் கூறி­யுள்ளார்.

அப்­துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள்  கூறு­கின்­றார்கள் .ரம­ழானில் விடு­பட்ட நோன்­பு­க­ளுக்குப்  பரி­கா­ர­மாக  ஏழை­க­ளுக்கு உண­வ­ளிக்க வேண்டும் என்ற வச­னத்தை   இப்னு உமர் (ரழி) அவர்கள் ஓதி­விட்டு  இந்த வசனம் கூறும் சட்டம் மாற்­றப்­பட்­டு­விட்­டது என்­றார்கள் (புகாரி  1949)

ஆகவே நோன்பு நோற்கச் சக்­தி­யுள்­ள­வர்கள்   நோன்­பிற்கு பதி­லாக ஏழைக்கு உண­வ­ளிக்க வேண்டும்  என்ற விளக்கம் தவ­றா­ன­தாகும் 
(c) விடு­பட்ட அத்­தனை நோன்­பு­க­ளையும் கணக்­கிட்டு நோற்க வேண்டும். அரி­சியைத் தான­மாக வழங்கத் தேவை இல்லை. இது தென்­னிந்­திய மற்றும் சிறி லங்கா தௌஹீத் ஜமா­அத்­தி­னரின்(SLTJ)  நிலைப்­பாடு ஆகும்.   

(d ) விடு­பட்ட நோன்­பு­களை நோற்கத் தேவை இல்லை. அரி­சி­யையும்  தான­மாகக்  கொடுக்கத் தேவையும் இல்லை. என்பது வேறுசிலரது கருத்தாகும்.

அல்லாஹ் கர்ப்­பி­ணி­க­ளுக்கும் பாலூட்டும் தாய்­மார்­க­ளுக்கும் நோன்பைக் கட­மை­யாக்­க­வில்லை. இவர்கள் நோன்பு நோற்கக் கூடாது என்­ப­தற்கு பின்­வரும் ஹதீஸ் சிறந்த ஆதா­ர­மாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள். 'நிச்­ச­ய­மாக அல்லாஹ் பிர­யா­ணியை விட்டும் தொழு­கையின் அரை­வா­சி­யையும், மேலும் பிர­யாணி, கர்ப்­ப­முற்­றவர், பாலூட்­டு­பவர் ஆகி­யோரை விட்டும் நோன்­பையும் நீக்கி விட்டான்.' அறி­விப்­பவர்: அனஸ்(ரழி) நூல்: இப்னு ஹுஸைமா 2042. நீக்­கி­விட்டான் என்றால் அது நிரந்­த­ர­மாக இல்­லா­ம­லாக்­கு­வதைக் குறிக்­குமா? நீக்­கி­விட்டான் என்­ப­தற்கு இங்கு ஹதீஸில் 'வழஅ' என்ற பதம் பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வார்த்­தைக்கு சிலர் 'சலு­கை­ய­ளித்­துள்ளான்' என அர்த்தம் செய்கின்றனர். இது தவறாகும். நிரந்தரமாக இல்லாமலாக்குவதையே இவ்வார்த்தை குறிக்கின்றது என்று விளக்கம்    அளிக்கின்றார்கள்.

இவ்விரு சாராரும் நோன்பு நோற்கக் கூடாது எனக் கூறிய இஸ்லாம் இவ்விரு பிரிவினரும் பின்னர் நோன்பு நோற்க  வேண்டும் என எங்கும் குறிப்பிடவில்லை இவர்கள்  நோன்பு நோற்காமல் விட்டதற்கு பிராயச்சித்த தானம்  கொடுக்க வேண்டிய அவசியமும்  இல்லை என்று விளக்கம் கொடுக்கின்றார்கள். (விடிவெள்ளி)
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.