Breaking News
recent

கடல் கடந்த மனித நேயம்..!


கேரள சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொடுமையாக கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதை செய்தியாக பார்த்தோம். அந்த மாணவியின் குடும்பத்தினர் ஏழ்மையில் உள்ளதை அறிந்த மஸ்கட் ஷிஃபா அல்ஜஸீரா குழுமத்தின் சேர்மன் கே.டி. ரபியுல்லா ஐந்து சென்ட் நிலமும் வீடு கட்டிக் கொள்ள மூன்று லட்ச ரூபாய் ரொக்கமாகவும் தர சம்மதித்துள்ளார். 

'அந்த பெண்ணின் கனவு வக்கீலாக வேண்டும். ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது. எனவே அந்த பெண்ணின் ஒரு ஆசையான வீட்டை கட்டிக் கொடுக்க முன் வந்துள்ளோம்' என்கிறார் ரபியுல்லா.


கடல் கடந்த மனித நேயம்! வாழ்த்துக்கள் சகோதரரே!

தனது நாட்டு சகோதரியின் கடைசி ஆசையையாவது நிறைவேற்ற துடிக்கும் இதற்கு பெயர்தான் தேசப் பற்று. இந்தியாவில் யார் இருக்கலாம் யார் இருக்கக் கூடாது என்று வெட்கமில்லாபமல் கூப்பாடு போடு சங் பரிவாரங்கள் எல்லாம் எங்கேப்பா போனீங்க? 


ஓ... நீங்கள் மேல் சாதி பெண்களுக்காக மட்டும் தான் குரல் கொடுப்பீர்களா? தலித் பெண்ணை பாரத மாதாவாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? வெட்கப்படுங்கள் சங் பரிவாரங்களே!

http://www.thepeninsulaqatar.com/news/qatar/381172/indian-expatriate-to-help-mother-of-rape-victim-in-kerala


நன்றி-சுவனப்பிரியன் 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.