Breaking News
recent

நலதிட்டங்களால் மக்கள் பயனடைய அதற்கான வழிமுறைகளை அரசு எளிமைபடுத்த வேண்டும் : சம்சுதீன் காசிமி கோரிக்கை.!


மத்திய மற்றும் மாநில அரசு அறிவிக்கும் பல்வேறு உதவி திட்டங்கள் மக்களை சென்றடையை அதனை மக்கள் எளிதில் அணுகும் வகையில் வழிமுறைகளை எளிமைபடுத்த வேண்டும் என அழகிய கடன் IAS அகடமியின் மற்றும் இல்மி நிறுனவர் சம்சுதீன் காசிமி கோரிக்கை விடுத்துள்ளார். 

சென்னை அண்ணா சாலை தர்கா அருகிலுள்ள மக்கா மஸ்ஜிதில் செயல்பட்டு வரும் அழகிய கடன் IAS அகடமியின் மற்றும் இல்மி நிறுனவர் சம்சுதீன் காசிமி துபாய் வருகை தந்தார்.

அவர் கூறியதாவது : அழகிய கடன் ஐஏ எஸ் அறக்கட்டளை' என்ற பெயரில் கடந்த 2012-ல் இருந்து சென்னை மக்கா மஸ்ஜித்தில் தகுதியான முஸ்லிம் மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவு ஆகியவற்றை உள்ளடக்கிய இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. முதல் வருடத்தில் 28 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. 


இந்த வருடம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் உட்பட 75 பேர் இந்த அறக்கட்டளையின் கீழ் பயின்று வருகின்றனர்.  அதே போன்று இல்மி அறக்கட்டளை மூலம் சிறப்பு மதிப்பெண் பெறுவோருக்கு இலவச உயர் கல்வியும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.எஃப்.எஸ். பயிற்சி அளிக்க முடிவு செய்து இத்திட்டம்  தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தில் 150 மாணவர்கள் பயின்று வருகிறார்கள் தற்போது இவ்வருடம் அதனை அதிகப்படுத்தி 300 மாணக்கர்களாக உயர்த்த உள்ளோம்.  10-ம் வகுப்பில் 90 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் www.ilmi.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

சென்னையில் மக்கா மஸ்ஜித் வளாகத்தில் சிவில் சர்வீஸ் (இந்தியக் குடிமைப் பணி) தேர்வுகளில் பங்கேற்க மாணக்கர்களுக்கு உரிய பயிற்சியளித்து அவர்களை தேர்வுக்கு தயார் செய்கிறோம்.  எங்களது மையத்தில் தேர்வாகும் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறோம் டெல்லியிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம்.


சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டு மாணவர்களுக்குத் தேவையான தகவல்களை அளிக்கின்றனர். 24 மணிநேர இணையதள வசதி, நூலக வசதி உள்ளது. உணவு மற்றும் தங்குவதற்கான இடம்ஆகியவற்றை நாங்களே மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து தருகிறோம்.

தேர்வின் அடிப்படையில் மாணவர்களை இந்தப் பயிற்சிக்குத் தேர்வு செய்கிறோம் தமிழ்நாடு முழுவதும் எங்களது பயிற்சி மையத்தில் சேர்வதற்கென ஏழு தேர்வு மையங்கள் உள்ளன. 


மத்திய அரசாங்கத்திற்கு சிறுபாண்மை திட்டங்கள் உள்ளன ஆனால் அடித்தள மக்களுக்கு அத்திட்டங்கள் சேர்வதில்லை வீணான சம்பிராதயங்களால் அலைகழிக்கபடுகிறார்கள் எனவே அவற்றை எளிமைபடுத்த வேண்டும்.

தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்திடன் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.ஆனாலும் பெரும்பாலானோர் இன்ஞ்சினியரிங்க படிப்பைதான் அதிகம் நாடுகின்றனர். 


அதை தாண்டி பல்வேறு  தொழில் ரீதியா படிப்புகள் உள்ளன.எனவே இது குறித்து விழிப்புணர் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம். மேலும் இஸ்லாமிய வங்கி தொடர்பான கல்வி குறித்து இவ்வருடம் பயிற்சி யளிக்க உள்ளோம்.

அதே போன்று முஸ்லிம் சமூகத்தாரிடம் இன்றளவும் வெளிநாடு செல்லும் ஆர்வம் குறையவில்லை. உதாரணமாக எங்களிடம் பயிற்சி பெற்ற மாணவரிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றும் வெளிநாடு சென்று விட்டனர்.


அவர்களோடு சேர்ந்து கற்றவர்களில் வெளிநாடு செல்லாமல் இருந்த எங்கள் மாணவர் அஸ்ரப் இன்று ஐஏஎஸ் ஆகி விட்டார் எனவே நம் தாய் நாட்டில் வாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது.அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.என்றார்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.