Breaking News
recent

இணையத்தை பயன்படுத்தி மொபைல் ஆப்ஸ் மூலம் போன் செய்யலாம்.!


மொபைல் இணைய பேக்கேஜ் மூலம் போன் அழைப்பு மேற்கொள்வது குறித்த பரிந்துரை அறிக்கையை ஒரு மாதத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக டிராய்  தெரிவித்துள்ளது.

 ஸ்மார்ட்போன்கள் வருகைக்கு பிறகு, ஸ்கைப், வாட்ஸ்ஆப், வைபர் 
போன்ற மொபைல் ஆப்ஸ் மூலம் குரல் அழைப்பு மேற்கொள்வது அதிகரித்து  வருகிறது. அதேநேரத்தில், இந்தியாவுக்குள் போன் எண்களுக்கு இதில் இருந்து அழைப்பு மேற்கொள்ள முடியாது. 


இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது  வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்தது. இதன்படி வெளிநாடுகளுக்கு செல்லும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்காக ஆப்ஸ் ஒன்றை அறிமுகம்  செய்தது பிஎஸ்என்எல். 

வெளிநாடு செல்லும் வாடிக்கையாளர்கள் இந்த ஆப்ஸ் மூலமாக இணைய இணைப்பை பயன்படுத்தி இந்தியாவில் இருக்கும் லேண்ட்  லைனுக்கு அழைப்பு மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தது.

 இந்த வசதியில் இந்தியாவுக்கு அழைப்பு மேற்கொள்ளும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ஐஎஸ்டி கட்டண சுமை இருக்காது. ஆனால், இந்த வசதிக்கு  தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. 


ஆப்ஸ் மூலம் இணைய வசதியை பயன்படுத்தி அழைப்பு மேற்கொள்வது தற்போது நடைமுறையில் உள்ள  தொலைத்தொடர்பு விதிகளுக்கு எதிரானது என இந்திய செல்போன் சேவை நிறுவனங்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. 

இதுகுறித்து இந்திய தொலைத்தொடர்பு  ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) தலைவர் ஆர்.எஸ்.சர்மா, ‘‘இணைய பேக்கேஜ் மூலம் ஆப்சை பயன்படுத்தி அழைப்பு மேற்கொள்வது தொடர்பான பரிந்துரை  அறிக்கை இன்னும் சில வாரங்களில், அதாவது ஒரு மாதத்துக்குள் சமர்ப்பிக்கப்படும். இணைய சமநிலை குறித்தும் இதில் ஆய்வு செய்யப்படும்’’ என்றார்.

 ஆப்ஸ் மூலம் இணைய பேக்கேஜ் பயன்படுத்தி அழைப்பு மேற்கொள்வதற்கு தனி கட்டணம் வசூலிப்பது இணைய சமநிலைக்கு எதிரானது என்ற எதிர்ப்புக்குரல் கடந்த  ஆண்டு இறுதியில் ஓங்கி ஒலித்தது. இதற்கிடையில் இதுபோன்றே இணைய சமநிலையுடன் தொடர்புடைய ஆப்ஸ் மூலமான தொலைபேசி அழைப்பு பற்றிய டிராய்  அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.