Breaking News
recent

மின்னணு சுங்கச்சாவடி அறிமுகம்: கியூவில் நிற்க வேண்டியது இல்லை.!


விக்கிரவாண்டியில் மின்னணு சுங்கச்சாவடி தொடங்கப்பட்டுள்ளது. இனிமேல் வாகனங்கள் வரிசையில் காத்துக்கிடக்க வேண்டிய அவசியம் இருக்காது. 

விக்கிரவாண்டியில் மின்னணு வசதியுள்ள சுங்கச் சாவடி மையம் துவக்க விழா நடந்தது. இதற்கு டோல்கேட் மேலாளர் முத்து தலைமை தாங்கினார். 

விழுப்புரம் இ.எஸ் மருத்துவமனை சேர்மன் சரவணன் முன்னிலை வகித்தார். டோல்கேட் பிஆர்ஓ ராஜசேகர் வரவேற்றார். விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இ டேக்கில் வரும் காரை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதுபற்றி நெடுஞ்சாலை துறை திட்ட அலகு மேனேஜர் தீபக் பேசுகையில், ‘’ பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் டோல்கேட்டை வாகனங்கள் கடந்து செல்ல ஒரே லேன் வசதி செய்யப்பட்டுள்ளது. 


இதன்படி இந்த டோல்கேட்டில் மின்னணு வசதியுள்ள இ-லேன் வசதி செயல்பட துவங்கி உள்ளது. இந்த வசதியை பெற வங்கிகளில் ரூ.100 முதல் ஒரு லட்சம் வரை பணம் இருப்பு வைத்துக்கொள்ளலாம்.

பின்னர் இ- டேக் ஸ்டிக்கரை (மின்காந்த வில்லை) வங்கிகளில் பெற்றுக் ெகாண்டு வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டிக்கொண்டு சுங்க சாவடியில் அதற்கான அமைக்கப்பட்டுள்ள இ-லேன் பாதையில் ஒரு நிமிடம் கூட காத்திருக்காமல் சிரமமின்றி பயணம் செய்யலாம். 


இந்த சேவையை பயன்படுத்துபவர்களுக்கு பண பரிவரத்தனையிலிருந்து சுதந்திரம் கிடைப்பதோடு, 2016-2017 நிதியாண்டிற்கு 10% கட்டண சலுகையும் பெற்றுக் கொள்ளலாம். எவ்வளவு கட்டணம் பெறப்பட்டது? வாகனம் எந்த டோல்கேட்டை கடந்து செல்கிறது என்பது போன்ற விவரங்களும் பயனாளியின் கைபேசியில் குறுந்தகவலாக வந்து விடும் என்றார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.