Breaking News
recent

பெரம்பலூரில் இன்று மாலை நடிகை குஷ்பு தேர்தல் பிரசாரம்.!


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று இவர் திருச்சியில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்து வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

இன்று மாலை 5 மணிக்கு அவர் பெரம்பலூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து மாலை 7 மணிக்கு ஜெயங்கொண்டத்திலும், இரவு 9 மணிக்கு காட்டுமன்னார் கோவிலிலும் பிரசாரம் மேற்கொள்கிறார். 


தொடர்ந்து அவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சென்று இரவு தங்குகிறார். நாளை பாபநாசம், கும்பகோணம் பகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.