Breaking News
recent

இனி சாதி சான்றிதழ்களை பள்ளிகளிலேயே பெறலாம் மத்திய அரசு அறிவிப்பு.!


இனிமேல் மாணவர்கள் ஐந்து அல்லது எட்டாம் வகுப்பு பயிலும்போதே அவர்களுக்கு சாதி மற்றும் பிறப்பிட சான்றிதழ்களை பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  

சாதி சான்றிதழ்கள் மற்றும் பிறப்பிட சான்றிதழ்களை அரசு அலுவலகங்களில் வாங்குவதற்கு பொதுமக்கள் மிகவும் அலைகழிக்கப்படுகிறார்கள். இந்த சான்றிதழ்களை பெற சம்பந்தப்பட்ட அலுவலர்களில் பெரும்பாலானோருக்கு லஞ்சம் கொடுப்பது ஏதோ கட்டணம் செலுத்துவது போன்று சாதாரண நடைமுறை என்பதுபோன்று ஆகிவிட்டது. 


இந்த சான்றிதழை, குறிப்பாக சாதி சான்றிதழை பெறுவதில் தாமதம் ஆவதால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைப்பதிலும் தாமதம் ஆகிறது" என ஏகப்பட்ட புகார்கள் வந்ததை தொடர்ந்தே மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

வழக்கமாக ஒரு மாணவனுக்கு சாதி மற்றும் பிறப்பிட சான்றிதழ்களை மாநில அல்லது யூனியன் பிரதேச அரசுகள்தான் வழங்கும். 

இந்நிலையில் மத்திய அரசு தற்போது அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பி உள்ள அறிவுறுத்தலில், " இனிமேல் பள்ளியின் முதல்வர் அல்லது ஹெட்மாஸ்டர்  சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து சான்றிதழுக்கு தேவையான ஆவணங்களை பெற்று, அவற்றை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து வேண்டிய சான்றிதழ்களை கோர வேண்டும். 


சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் அந்த ஆவணங்களை ஆய்வு செய்து, உரிய சான்றிதழ்களை 30 முதல் 60 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.