Breaking News
recent

பள்ளிக்கூடத்தில் 'ஸ்கார்ப்' அணிய தடை : மாவட்ட கலெக்டர் விசாரணை.!


உத்தரபிரதேச மாநில தலைநகர் 'லக்னோ'வின் 'செயின்ட் ஜோசப் இன்டெர் காலேஜ்' பள்ளிக்கு, 9-ம் வகுப்பு முஸ்லிம் மாணவி 'ஸ்கார்ப்' அணிந்து வந்த ஒரே காரணத்துக்காக பள்ளியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.

இம்மாதம் 6-ந்தேதியன்று பள்ளியில் சேர்ந்த ஃபர்ஹீன் பாத்திமா என்ற மாணவி, மறுநாள் 07-05-2015 அன்று பள்ளிக்கு 'ஸ்கார்ப்' அணிந்து சென்றபோது தடுக்கப்பட்டுள்ளார்.

அதையடுத்து, அடுத்த நாள், தனது தாயார் 'வகார் பாத்திமா'வை அழைத்து சென்று தலைமையாசிரியையிடம் பேசியும் பலனில்லாமல் பள்ளியை விட்டு நீக்கப்பட்டுள்ளார், மாணவி பாத்திமா.

முன்னதாக, இப்பள்ளியில் புதிதாக சேர்ந்த இம்மாணவி, தனது விண்ணப்ப படிவத்தில் ஸ்கார்ப் அணிந்த நிலையில் உள்ள புகைப்படத்தை தான் கொடுத்திருந்தார்.

நேர்முகத்தேர்வின்போதும், கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக 3 முறை பள்ளிக்கு வந்தபோதும், தலையில் 'ஸ்கார்ப்' அணிந்தே வந்த மாணவி பாத்திமா, தற்போது பள்ளியை விட்டு நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் மாவட்ட கலெக்டர் ராஜசேகரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து,19-05-2015 அன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி பள்ளி நிர்வாகத்துக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.