Breaking News
recent

முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கை: டொனால்டு டிரம்ப் மீது ஒபாமா தாக்கு.!


அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் உத்தேச வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் கடந்த டிசம்பர் மாதம் பேசும்போது, தான் ஜனாதிபதியானால் அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைவது தடை செய்யப்படும் எனவும் அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பப்படும் எனவும் கூறியிருந்தார். டிரம்பின் இந்த கருத்து அப்போதே சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் அமெரிக்காவின் ரட்கர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி ஒபாமா கலந்து கொண்டு பேசினார். அப்போது முஸ்லிம்களுக்கு எதிரான டிரம்பின் கொள்கைகளை அவர் தாக்கி பேசினார்.

டிரம்பின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் ஒபாமா பேசுகையில், ‘நமது நாட்டுக்கு வரும் முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதும், இழிவுபடுத்துவதும் நமது மதிப்பீடுகள் இல்லை. இது பிரிவினைவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நமது மிக முக்கியமான கூட்டாளிகளான அவர்களை அந்நியப்படுத்தி விடும்’ என்றார்.

அரசியலிலும், பொது வாழ்விலும் புறக்கணிப்பு என்பது ஒரு நல்லொழுக்கமாக இராது என்று கூறிய ஒபாமா, ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ள உலகில், இடையே எழுப்பப்படும் சுவர்களால் எதுவும் மாற்ற முடியாது என்று தெரிவித்தார். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.