Breaking News
recent

முஸ்லீம்கள் அமெரிக்கப் பயணத்தடை: சாதிக் கானுக்கு மட்டும் ட்ரம்ப் விதி விலக்கு.!




அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் , தான் ஆட்சிக்கு வந்தால், முஸ்லீம்கள் அமெரிக்காவுக்குப் பயணம் செய்யக்கூடாது என்று விதிக்கவிருக்கும் தடைக்கு , லண்டனின் புதிய மேயர் சாதிக் கானுக்கு விலக்களிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
சாதிக் கான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து தான் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகக் கூறிய ட்ரம்ப், சாதிக் கான் அவரது பணியை சிறப்பாகச் செய்தால் அது நல்ல விஷயமாக இருக்கும் என்றார்.
ட்ரம்ப் ஒருவேளை வரும் நவம்பர் மாதம் நடைபெறப்போகும் அதிபர் தேர்தலில் வென்று , முஸ்லீம்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்வதை தடை செய்யப்போவதாக சூளுரைத்திருப்பதை நிறைவேற்றுவதற்கு முன்னரே, அமெரிக்காவுக்கு ஒரு முறை சென்று வந்துவிடப் போவதாக புதிய லண்டன் மேயர் சாதிக் கான் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.