Breaking News
recent

ஜெர்மனியில் பாங்கு, மினாரத், புர்காவை தடைசெய்ய "பெடிகா" தீர்மானம் நிறைவேற்றம்.!


ஜெர்மனிக்கான மாற்று எனும் வலதுசாரி கட்சி, இஸ்லாம் ஜெர்மனிக்கு உரியது அல்ல எனக் கூறும் தமது தேர்தல் அறிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளது.

ஜெர்மனிக்கான மாற்று எனும் கட்சி இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது

ஸ்டுட்கார்ட் நகரில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், இஸ்லாமிய கோபுரங்கள், தொழுகைக்கான அழைப்பு மற்றும் முகத்தை மறைக்கும் முகத்திரை ஆகிவை தடை செய்யப்பட வேண்டும் எனும் தீர்மானத்தையும் அக்கட்சி நிறைவேற்றியுள்ளது.

கடந்த ஒராண்டில் நாடு முழுவதும் அக்கட்சிக்கான ஆதரவு பெருகி வந்துள்ளது என அங்குள்ள பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

பெடிகா எனும் அமைப்பும், இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுகிறது

ஜெர்மனிக்கு பத்து லட்சத்துக்கும் அதிகமான குடியேறிகள் வந்துள்ள நிலையில், அந்தக் கட்சிகான ஆதரவு பெருகியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது எனவும் கூறப்படுகிறது.

அவ்வகையில் குடியேறிகளாக வந்தவர்களில் பெரும்பாலானோர் போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள்.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற அக்கட்சி, பிராந்திய அளவில் அரைவாசி அளவிலான இடங்களைக் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.