Breaking News
recent

'கீ போர்டு' இல்லாமல் டைப் செய்யலாம்.!


உங்கள் மொபைல், பலகைக் கணினி, மடிக்கணினி போன்றவற்றில் இனி விசைப் பலகைகளுக்கு வேலை இல்லாமல் போகலாம். ஏனெனில், 'டாப் ஸ்ட்ராப்' என்ற சாதனம், 'கீ போர்டு'களுக்கு ஓய்வு தரக்கூடும்.

விரல்களில் மோதிரம் போல அணிந்து கொள்ளக்கூடிய டாப் ஸ்ட்ராப், எந்த சாதனத்திற்கும் டைப் செய்ய உதவும். இதை அணிந்தவர், எந்த பரப்பின் மீதும் சும்மா டைப் செய்தால் போதும், அந்த அசைவுகளை டாப் ஸ்ட்ராப் புரிந்துகொண்டு, 'புளூடூத்' மூலம் இணைந்துள்ள திரையில் எழுத்துகளாக மாற்றிக் காட்டும்.

இந்த சாதனத்தை அணிந்தவர் செய்யும் ஒவ்வொரு விரலசைவுக்கும் ஒரு எழுத்து, குறியீடு அல்லது செயல், திரையில் அரங்கேறும். நம் விரல்களில், 31 வித அசைவுகளை உருவாக்க முடியும் என்பதால், அதையே டாப் ஸ்ட்ராப் பயன்படுத்தி கொள்கிறது.

இந்த அசைவுகளை நாம் புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும். விசைப் பலகையை பயன்படுத்துவதால் ஏற்படும் பலவித உடல்நல குறைபாடுகளை போக்க, விரைவில் வரவிருக்கும் டாப் ஸ்ட்ராப் உதவலாம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.