Breaking News
recent

விமான கட்டணத்தை குறைக்க விரைவில் புதிய சீர்திருத்தங்கள்.!


விமான போக்குவரத்து துறையில் இந்தியா மற்ற வளர்ந்த நாடுகளை விட முந்தி சென்று கொண்டிருக்கிறது. விமான பயணிகளின் எண்ணிக்கையும் முன்பை விட 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 

எனினும், விமான பயண கட்டணங்களில் அதிக அளவில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. இதை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு விரைவில் புதிய சீர்திருத்தங்களை கொண்டுவர உள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏற்கனவே உள்ள விமான நிலையங்களில் வசதிகளை மேம்படுத்தவும், புதிய விமான நிலையங்களை நிறுவவும் ரூ.15 ஆயிரம் கோடியை நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளது. 


விமான பயண கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய விமானப் போக்குவரத்து கொள்கைகளை மத்திய அரசு இன்னும் 2 வாரத்திற்குள் மத்திய அமைச்சரவை முன் வைக்க உள்ளது. 

ஆனால், இவை விமான நிறுவனங்களின் கருத்து கேட்பின் அடிப்படையிலேயே கொண்டு வரப்பட உள்ளதாகவும், கட்டாய விதிமுறைகளால் கொண்டு வரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் விமான போக்குவரத்தில் 9-வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.