Breaking News
recent

அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குழந்தைகள், பெற்றோர்களுக்கான குடும்ப சங்கம நிகழ்ச்சி.!


அமீரகத்தில் இந்தியர்களின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் எமிரேட்ஸ் இந்தியா ஃபிரட்டர்நிட்டி ஃபோரம் (Emirates India Fraternity Forum-EIFF) சார்பாக குழந்தைகளுக்கான “Get Set Goal…!” மற்றும் பெற்றோர்களுக்கான “Parenting by Horns…!” என்ற குடும்ப சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது.
3
அஜ்மான் அல் ஜுர்ஃப் பகுதியில் உள்ள இண்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூல் அரங்கத்தில் வைத்து கடந்த மே 06, 2016 வெள்ளிக்கிழமை குடும்பங்கள் குதூகலமாக சங்கமிக்கும் வித்தியாசமான குடும்ப சங்கம நிகழ்ச்சி நடைபெற்றது.
“உங்கள் குழந்தைகளைக் கட்டியெழுப்புங்கள்! உங்கள் மறுமை வெற்றிக்காக முதலீடு செய்யுங்கள்!!” என்ற முழக்கங்களை முன் வைத்து இந்நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
4
இந்த அழைப்பை ஏற்று அன்று மாலை 5 மணி முதல் மக்கள் குடும்பம் குடும்பமாக பதிவு செய்து அரங்கத்தில் குவிந்தனர். நிகழ்ச்சியின் துவக்கமாக பொறியாளர் அப்துல் கஃபூர் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்து எமிரேட்ஸ் இந்தியா  ஃபிரட்டர்நிட்டி ஃபோரம் பற்றி ஒரு சிறிய அறிமுக உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியை எழுத்தாளரும், “புதிய விடியல்” மாத இதழின் துணையாசிரியருமான எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள் தொகுத்து வழங்கினார்.
1
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக குழந்தைகளுக்கான “Get Set Goal…!” என்ற நிகழ்ச்சி “புரூஜ் ரியலைஸேஷன்” நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாகியுமாகிய ஆசிரியர் தாவூத் வெய்த் அவர்கள் மூலம் நடத்தப்பட்டது. 
குழந்தைகளுக்கான சிறிய கேள்வி பதில்கள், குழந்தைகளுக்கான அறிவுரைகள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றுடன் மிக குதூகலமாக நடைபெற்ற இந்த வகுப்பில் வந்திருந்த குழந்தைகள் ஆர்வமாக பங்கேற்றனர்.
கேள்விகளுக்கு சரியாக விடையளித்த குழந்தைகளுக்கு உடனுக்குடன் தாவூத் வெய்த் பரிசுகளை வழங்கினார். பங்கேற்ற குழந்தைகளின் அறிவுத்திறன், சமயோகித புத்தி, உடனுக்குடன் பதில் சொல்லும் திறமை ஆகியவற்றை சிறப்பு விருந்தினர்கள் உட்பட வந்திருந்த அனைவரும் மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள்.
5
இதனையடுத்து மஃக்ரிப் தொழுகைக்கான இடைவேளையும், சிறிய சிற்றுண்டி ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. இதற்கான சிறப்பான ஏற்ப்பாடுகளை EIIF தன்னார்வலர்கள் செய்திருந்தனர். இதன் பின்னர் மாலை 07.15 மணியளவில் பெற்றோர்களுக்கான நிகழ்வு தொடங்கியது.
“Parenting by Horns…!” என்ற தலைப்பில் இந்தியாவில் இருந்து வருகை புரிந்த ஆசிரியர் “தாவூத் வெய்த்” அவர்கள் முதல் வகுப்பை பவர் பாயிண்ட் பிரசன்டேஷனுடன் நடத்தினார். பல்வேறு உதாரணங்கள் மற்றும் விளக்கப் படங்களுடன் நடந்த இந்த வகுப்பு பார்வையாளர்கனை மிகவும் கவர்ந்தது. அவர்களுக்கு மிகச் சிறந்த பாடமாக அது அமைந்தது.
6
இதனையடுத்து சகோ. சலீம் குழுவினர் யோகா பயிற்சியை செயல் விளக்கத்துடன் வழங்கினார்கள்.
9
நிகழ்ச்சியின் அடுத்த பகுதியாக “ஒளிமயமான இல்லம்” என்ற தலைப்பில் குர்ஆன் மற்றும் வரலாற்று சம்பவங்களுடன் பொறியாளர் தமீம் மன்சூர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
7
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய Dr. S. M. ஹைதர் அலீ., D. F. E.  (USA) (Chairman, TVS Travels & Cargo WLL) அவர்கள், உடல் நலத்தை பேணுவதன் முக்கியத்துவத்தையும், மாத்திரை மருந்துகள் ஏற்படுத்தும் ஆபத்துகளையும், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கச் செய்வதன் அவசியத்தையும் அருமையாக விளக்கினார்.
4
8
நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான சகோ. பீர் முஹம்மது அவர்கள் சிறப்பு விருந்தினர் டாக்டர் ஹைதர் அலீ அவர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்.
2
நிகழ்ச்சியின் கதாநாயகரான தாவூத் வெய்த் அவர்களுக்கு பொறியாளர் தமீம் மன்சூர் அவர்கள் நினைவுப் பரிசினை வழங்கினார்.
இறுதியாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சகோ. முஹம்மது முனவ்வர் அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
3

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.