Breaking News
recent

இந்தோனேசிய குடிமக்கள், வெளிநாடுகளில் முதலாளியின் வீட்டில் தங்க தடை.!


இந்தோனேசிய குடிமக்கள் வெளிநாடுகளில் முதலாளியின் வீட்டில் தங்கி பணிப்பெண்ணாக வேலை செய்யவது அடுத்த வருடம் முதல் தடை செயப்படும் என்று இந்தோனேசியா அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் அவர்கள் முதலாளியின் வீடுகளில் தங்காமல், தனியாக தங்கி இருந்து, முறையான வேலை நேரம், உத்தரவாதம் செய்யப்பட்ட வார விடுப்பு போன்றவை இருந்தால் வேலை செய்ய அனுமதிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இது குறித்து இந்தோனேசியா அதிகாரிகள், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களை பாதுகாக்கும் எண்ணத்தோடு இந்த திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், இது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தது என்றும் உறுதிபடுத்தினர்.

பணியாளாக லட்சக்கணக்கான இந்தோனேசியர்கள் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர்.

அவர்களில் பலர் அவர்களது முதலாளிகளின் வீடுகளில் தங்கியிருக்கின்றனர்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.