Breaking News
recent

கணினியில் ஆன்டிவைரஸ் மென்பொருள் இல்லையா?கவலையை விடுங்க இதை ட்ரை பண்ணிபாருங்க.!


கணினிகளை தீமை விளைவிக்கும் வைரஸ்கள், மால்வேர்களிடம் இருந்து காப்பது சவாலான காரியமாக உள்ளது. இருந்தாலும் கணினியில் ஆன்டிவைரஸ் மென்பொருள் இல்லாதபோது, இணையதளம் மூலம் நமது கணினியை வைரஸ் ஸ்கேன் செய்ய முடியும். அதற்கான மென்பொருள் பற்றி பார்ப்போம்...

வைரஸ் டோட்டல் (viurs total)   எனப்படும் இணையதள ஆன்டி வைரஸ் தளத்திற்கு சென்று இதை நாம் பயன்படுத்தலாம். 
இதை பெற  https://www.virustotal.com  என்ற லிங்கை தட்டச்சு செய்து நமது கணினியை ஆன்லைன் மூலமாக ஸ்கேன் செய்து பாதுகாக்கலாம்.

இது தவிர வைரஸ்களில் இருந்து பாதுகாக்க மேலும் சில வழிகளை அறிந்து கொள்ளலாம்...

லீனக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தும்போது அதில் அனேக விதமான வைரஸ்கள் அண்ட முடியாமல் தடுத்துவிடுகிறது. நமது கணினிகளை அது பாதுகாப்பாக வைக்கும்.

பிரவுசர் எனும் உலவிகளை கவனமாக கையாள்வதன் மூலம் வைரஸ் தொற்றுவதை தடுக்கலாம்.


மின் அஞ்சல்களுக்கு வரும் தேவையற்ற மின்னஞ்சல்களை திறந்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

தேவையற்ற வலைப்பக்கங்களுக்கு செல்லக்கூடாது. தேடுபொறி தளங்களில்கூட தேவையற்ற வலைப்பக்கம் பற்றி தேடுவதை தவிர்க்க வேண்டும்.

 நமக்குத் தெரிந்த வலைப்பக்கங்களை தேடுபொறியில் தேடாமல், நேரடியாக இணையதள முகவரியை பயன்படுத்தி திறக்க வேண்டும்.

 மின்னஞ்சல்களில் வரும் 'லிங்' மற்றும் இணையதளத்தில் தோன்றும் 'லிங்' ஆகியவற்றை கிளிக் செய்யக்கூடாது.

மென்பொருட்கள் அல்லது ஏதேனும் திரைப்படங்கள், பாடல்கள், பதவிறக்கம் செய்யும்போது அது பாதுகாப்பான வலைப்பக்கமா என்று உறுதி செய்து பின்பு பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

கணினிகளில் உள்ள அனைத்து மென்பொருட்களை அவ்வப்போது மேம்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும். முக்கியமாக உலாவிகள் மற்றும் விண்டோஸ் அப்ளிகேசன்களை மேம்படுத்துதல் மிகவும் அவசியம்.

உலாவிகளை மேம்படுத்தும்போது அதில் இன்டர்நெட் செக்யூரிட்டி இணைக்கப்பட்டு இருக்கும். எனவே தேவையற்ற மென்பொருட்களை நிறுவும்போது அது நமக்கு எச்சரிக்கை தகவலை கொடுக்கும். அப்படி தகவல்களை பெற்றால், அந்த மென்பொருள் நிறுவுவதை தவிர்த்துவிடலாம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.